தமிழ்கூறும் நல்லுலகுக்கு 'தேனீ', 'வைகை' ஒருங்குறி எழுத்துருக்களை ஈந்து தமிழ் இணைய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற அதிரை மைந்தன் மர்ஹூம் உமர்தம்பி அவர்களுக்கு கோவையில் நடந்த உலகத் தமிழிணைய மாநாட்டில் "தமிழ் இணைய அறிஞர்" விருது வழங்கப்பட்டது.
சிங்கை தமிழ் உலகம் அறக்கட்டளை சார்பில் முரசொலி மாறன் அரங்கில் நடந்த விழாவில் ஆஸ்திரேலிய தமிழறிஞர் திரு.பாலா பிள்ளை அவர்கள் உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர் ஜனாப். அப்துல் காதர் அவர்களிடம் "தமிழ் இணைய அறிஞர்" விருதை வழங்கி கவுரவித்தார்.
விழா மேடையில் உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் ஜனாப்.மொய்னுத்தீன் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக மதிய இடைவேளையின்போது துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உமர்தம்பி அவர்களின் மகன் மொய்னுத்தீனிடம் மறைந்த உமர்தம்பி அவர்களின் தமிழ்ச் சேவைகள் தம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.