டோக்கியோ : நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின்நிலைய நெருக்கடி காரணமாக அரசு அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நேட்டோ கான் தெரிவித்துள்ளார். மார்ச் 11ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றுக்குப் பிறகு அணு உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக சூடேறி வெடித்ததில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டு வருகிறது. அவற்றைக் குளிரவைக்க ஜப்பான் அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.