உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்டகாங்கியில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வங்காள தேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, வங்காள தேச அணியின் பந்து வீச்சில் ரன் எடுக்க திணறினர். இறுதியில் 49.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிராட் 67 ரன்களும், மோர்கன் 63 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இம்ருல் கேயஸ் 60 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். தொடக்க வீரர் தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்தார்.
வங்காள தேச அணி 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 9 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மக்முதுல்லா, ஷபியுல் இஸ்லாம் ஜோடி 58 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
ஷபியுல் இஸ்லாம் 24 ரன்களும் மக்முதுல்லா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து வங்காள தேச அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.