மதுரை அவனியாபுரத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் உருவப் படத்துக்கு அந்தப் பகுதி மக்கள் பாலாபிஷேகம் செய்தனர். -
தமிழகத்தில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயங்களில் அவர்களின் கட்-அவுட் மற்றும் உருவப் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 14-வது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் கட்சியினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வாக்குப் பதிவும், அதே சமயம் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் மிக அமைதியாகவும் தேர்தல் நடைபெற்றது.
இதற்காக மதுரை அவனியாபுரத்தில் பணப் பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமத்தின் அவனியாபுரம் கிளை சார்பில் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டது.
அதில் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். அரசு அதிகாரிக்கு விளம்பர பேனர் வைத்து அதில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.