சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரி வலியுறுத்தி மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவர் நல்லகாமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.