N

17.7.11

பிளாஸ்டிக் இல்லாத உலகம் நாமும் போராடுவோம்!

JULY 17, மேட்டுப்பாளையம்: பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரி, சைக்கிள் வீரர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை, பிரசார பயணம் மேற்கொண்டார். 

ஊட்டி சைக்கிள் வீரர் பிரசாத், நேற்று மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டார். வழிநெடுக பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரியும் பிரசாரம் செய்தார். 

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு, அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் ஹபிபுல்லா தலைமை வகித்தார். நகராட்சி வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஷாஜஹான், சிட்டி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலு கொடியசைத்து துவக்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வதூத், சைக்கிள் வீரர் அறிவழகன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். யுவராஜ் வரவேற்றார். ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.