காந்திநகர்:மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கோஹில் தலைமையிலான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து லோகாயுக்தா தொடர்பாக விவாதித்தனர். தொடர்ந்து ஆளுநர் சட்டநிபுணர்களுடன் கலந்தாலோசித்து லோகாயுக்தாவை நியமித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடந்த ஏழு வருடங்களாக எவ்வித அமைப்பும் மாநிலத்தில் இருக்கவில்லை. அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் மோடி லோகாயுக்தாவை நியமிக்காதது கவுரதரமானது என எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கூறுகிறார். ஆளுநரின் நடவடிக்கையை பா.ஜ.க ஒரு தலைபட்சமானது என பா.ஜ.க பதில் அளித்துள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.