லண்டன்:இங்கிலாந்தில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அந்த அணிக்கு ஒரு வெற்றி கிடைத்தது. இது முதல் வெற்றி என்பதால் இந்திய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நேற்று நடந்த சசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது,
இந்திய அணி அந்த அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சசெக்ஸ் அணி 45 ஓவர்களில் 236 ரன்களை எடுத்தது. ஆர்.பி.சிங் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்களைச் சாய்த்தார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் விராத் கோலி 71 ரன்களைக் குவித்தார். ரோஹித் சர்மா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பா3ர்த்திவ் படேல் 55 ரன்களை விளாசினார்.
சச்சின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இருப்பினும் 21 ரன்களில் அவர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு புதுத் தெம்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று கென்ட் அணியுடன் இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஆடுகிறது.
இது பகல் இரவுப் போட்டியாக கான்டர்பரியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் புதிய வீரர்கள் வருண் ஆரோன், அஜிங்கியா ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். வருண் ஆரோன், பந்து வீச்சில் எப்படி செயல்படுகிறார் என்பதைப்
பார்க்க இது நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால் அவரது ஆட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய போட்டியில் சச்சின், டோணி விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. அதேபோல டிராவிடும் கூட ஓய்வளிக்கப்படலாம். இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டியில்
அதிக வாய்ப்பு தரப்பட்டு அவர்கள் பரீட்சிக்கப்படவுள்ளனர்
வெற்றியை தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா!!!!!!!!!
ReplyDeleteபயிற்ச்சி ஆட்டத்தில் உள்ள வெற்றி எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாயது..............
ReplyDeleteவெற்றி அதிகரிக்க அதிகரிக்க அணியின் பலம் குறைகிறது. இதுவே தோல்விக்கி முக்கிய காரனம்......................