சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்கப்படும். அவர்கள் பாடச்சுமையை குறைக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் மேலும் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, 90 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும். குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு புத்தகச் சுமை அதிகமாக இருப்பதால், இந்த சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும்.
முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதனால், மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்ல புக்க கொடுங்க அப்பரோம் பைய் கொடுகளாம்.
ReplyDelete