
தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.
அதன்படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு கலப்பின கறவை மாடு, விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.
இத்திட்டங்களை அண்ணா பிறந்த நாளில் துவங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.இதில், முக்கியமான 3 திட்டங்களுக்கு பட் ஜெட்டில் ரூ.2,353 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.