N

24.11.11

2017ஆம் ஆண்டுக்குள் மேலும் 10 அணு மின் நிலையங்கள்!


12ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் (2012-2017) போது மேலும் 10 அணுமின் நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி இவ்வாறு கூறினார். 2012 மார்ச் மாதத்துடன் முடிவடையும் 11ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் போது புதிய அணுமின் நிலையம் எதுவும் தொடங்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது 19 அணு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 4,560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.