N

20.11.11

ஆரம்பமே இப்படி... இன்னும் 5 வருஷம் எப்படி!!!


தமிழகத்தில் பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு நிறுவனமான ஆவின் பால் விலையை அதிமுக அரசு லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை உயர்த்தியது. மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என இன்று (20.11.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.