N

5.11.11

இனி இருநூரு எஸ்.எம்.எஸ் அனுப்பளாம்!!!


ஒரு நாளுக்கு ஒரு சிம் கார்டில் இருந்து 200 எம்எஸ்எஸ் வரை இனி அனுப்பலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நேற்று அனுமதி அளித்தது. 

செல்போனில் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொந்தரவை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் தேவையற்ற எஸ்எம்எஸ் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒரு நாளில் அதிகபட்சம் 100 எம்எஸ்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்று டிராய் விதிமுறை கொண்டு வந்தது.

இதற்கு பொதுவாக வரவேற்பு கிடைத்த போதிலும், முறையாக அனுமதி பெற்று எஸ்எம்எஸ் தகவல் அனுப்பும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சிலர் இந்த விதிமுறையை தளர்த்த கோரி டிராய்க்கு கடிதம் அனுப்பினர். அவற்றை கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆராய்ந்து வந்தனர். 

இந்நிலையில், தினசரி எஸ்எம்எஸ் உச்சவரம்பை 100ல் இருந்து 200 ஆக உயர்த்தி டிராய் நேற்று அனுமதி அளித்தது. 

இதுபற்றி அது வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி பல்வேறு பிரிவினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. தினசரி 100 எஸ்எம்எஸ் மட்டுமே என்ற உச்சவரம்பை அதிகரிக்குமாறு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் கேட்டனர். எனவே, ஒரு சிம் கார்டில் இருந்து ஒரு நாளில் அதிகபட்ச எஸ்எம்எஸ் 200 ஆக உயர்த்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.