N

2.11.11

தி.நகரில் கடைகளுக்கு சீல்!!


சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

31.10.2011 அன்று நீதிமன்றம் 
உத்தரவு அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். கட்டிடங்கள் கட்டும் போதே அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டவிடாமல் தடுத்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பது நியாயமா?

இந்த நடவடிக்கை தொடர்ந்தால் சென்னை மாநகர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அநேக முக்கிய நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான கட்டிடங்களைப் பூட்டி சீல் வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

உள்நாட்டு சில்லரை வணிகத்திற்கு எல்லா விதத்திலும் தமிழக அரசு துணையாக நிற்க வேண்டும். தி.நகர் போன்ற வணிகத் தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமேயன்றி ஒழித்துக் கட்டிவிடக் கூடாது.

சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்பது எமது பேரவையின் உறுதியான கருத்து. சட்டத்துக்காக மக்களா? மக்களுக்காக சட்டமா? என்கிற அடிப்படையில் முடிவெடுத்து இந்த பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

   

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.