N

3.1.12

அடுத்த 2 வாரங்களுக்கு பெட்ரோல் விலை உயராது!!!

பெட்ரோல் விலை 16ம் தேதி வரை உயர வாய்ப்பில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்காததால், விலை உயர்வை மீண்டும்  எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்தன. பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயிக்கும் அதிகாரத்தை 2010 ஜூனில் எண்ணெய் நிறுவனங்கள் பெற்றன. ஒவ்வொரு மாதமும் 1, 15ம் தேதிகளில் விலை மாற்றத்தை அறிவித்து வந்தன. கடந்த மாதம் 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலையை ரூ.1 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன.

ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்ததால் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, முடிவு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு, அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 53.07 ஆனதால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பை சமாளிக்க 1ம் தேதி முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.10 உயரலாம் என்று தகவல் வெளியானது. எனினும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசின் எதிர்ப்பு, 5 மாநில சட்டசபை தேர்தல்  ஆகியவை காரணமாக பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோல் விலை உயர்வை மேலும் 2 வாரங்கள் ஒத்தி வைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்தன.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.