மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள லஹேரி காவல் நிலையம், காட்டுப் பகுதி அருகே அமைந்துள்ளது. நேற்று காலை நக்சலைட்கள் துப்பாக்கிகளுடன் இந்த காவல் நிலைய த்தை முற்றுகையிட்டு சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பிறகு, போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நக்சலைட்கள் காட்டுக்குள் தப்பியோடி விட்டனர்.
நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் லஹேரிக்கு கூடுதல் போலீஸ் படை விரைந்தது. தப்பியோடிய நக்சலைட்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.