முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.
மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக் கூடிய அரசியல் கட்சி" என்றார்.
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2.இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தோல்வி பயம் தொகுதி மாறும் கருணாநிதி!!
சென்னை: பிப் 13, கருணாநிதி தொகுதி மாறுகிறார்: தமிழகத்தில் பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஏன் இவர் சேப்பாக்கம் தொகுதியைவிட்டு மாறுகிறார் என்றால் அங்கு முஸ்லிம்கள் வாக்கு அதிகம் அது இந்த முறை நிச்சயம் கருணாநிதிக்கு கிடைக்காது என்பாதால்தான்.
சிந்திக்கவும்; ஈழ தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழர் தலைவர் என்று சொல்லிகொள்ளும் மு.கருனாதியையும் அவரது கூட்டணியையும் தோற்கடிக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் தோல்வியை கொடுக்கவேண்டும். அப்போதுதான் முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு இதுதான் முதல் பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்த நடவடிக்கைகள் இனிமேல் தொடரும் என்பதற்கு இது ஒரு முகவுரையாக இருக்கட்டும். திருவாரூர் இல்லை தமிழகத்தின் ஏந்த மூலையில் இவர் நின்றாலும்
வரும் தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு 144.
144 என்றதும் தடை உத்தரவு என்று நினைத்தீர்களா! அதுதான் இல்லை வரும் தேர்தலில் 144 இடங்களில் அ.தி.மு.க. நிர்கபோகிறது சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. 144 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. 144 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 9 ராசியான நம்பர் என கருதப்படுகிறது. எனவே அதன் கூட்டுத் தொகை வருவது போன்று 144 தொகுதிகளில் அ.தி. மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சீட்டுகளை எதிர்பார்த்து மவுனம் காக்கும் விஜய்!!!
1 comments
நடிகர் விஜய்க்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிய வந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுக்களை விஜய் எதிர்பார்கிறார். வியகாந்துக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதுபோல் தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிகிறது. விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இப்போது விஜய்யின் மக்கள் இயக்கம் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், இந்த அமைப்புக்கு அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார். இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனது கட்சிக்கு அதிக சீட்டுக்கள் விஜய் கேட்ப்பார் என்று தெரிகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார். இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனது கட்சிக்கு அதிக சீட்டுக்கள் விஜய் கேட்ப்பார் என்று தெரிகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.