சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யும் வகையில், தற்போதைய பள்ளி நேரத்தை மேலும் 30 நிமிடங்கள் அதிகரிக்க, தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு 1 மற்றும் 6ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் அமலப்டுத்தப்பட்டது. இந்தாண்டு 10ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கும் நீண்ட இழுப்பறிக்கு பின் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையி்ல் சமச்சீர் கல்வியை பள்ளிகளில் அமல்படுத்தப்படுவதில் ஏற்பட்ட இழுப்பறியில், கடும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பள்ளி படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதை களையும் பொருட்டு பள்ளி கல்வி நேரத்தை தற்போது உள்ளதை விட, 30 நிமிடங்கள் அதிகரிக்க தமிழக கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த கூடுதல் நேரம் மூலம் ஏற்பட்ட காலதாமதம் சீர் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான உத்தரவு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கல்வி துறை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, பள்ளி நேரம் அதிகரிக்கும் முடிவு கடந்த 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த நேர அதிகரிப்பு துவக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்படாது. மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படும், என்றார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.