N

9.2.11

முஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: மகிளா கோர்ட்டுக்கு மாற்றம்

கோவை: கோவையில் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்தின் குழந்தைகள் முஸ்கான்(10), ரித்திக்(8) கடந்த அக்டோபர் 29ம் தேதி வேன் டிரைவர் மோகன்ராஜால் கடத்தி கொலை செய்யப்பட்டனர். மோகன்ராஜ், கூட்டாளி மனோகரன் கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்றபோது, மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். கூட்டாளி மனோகரன் மீது கோவை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 576 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட மகிளா கோர்ட்டுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.