N

1.10.11

அதிரையில் மின் தடை! பொதுமக்கள் அவதி!


கடந்த சில நாட்களாக, அதிரை மற்றும்  சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இரவுநேர மின்தடையால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்; கொசுக்கடி, புழுக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதாவிடம் கேட்ட போது, ""கடந்த சில தினங்களாக, காற்று வீசாததால், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்னுற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள ராமகுண்டத்தில் இருந்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரமும் தடைபட்டுள்ளது.


காற்றாலை மின்னுற்பத்தி முற்றிலும் நின்றதால்,அதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் அடிக்கடி தடைபடுகிறது. 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சாரம் தடைபடுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தி.மு.க., தலைமையிலான கடந்த ஆட்சி காலத்தில், ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். 

ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் மின்தடை ஏற்பட்டதால் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டது; அன்றாட வாழ்க்கையிலும் பல்வேறு சிரமத்தை பொதுமக்கள் சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டது.சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண முக்கியத்துவம் தரப்பட்டது. 

மின் வினியோகத்தில் இருந்த குளறுபடி, படிப்படியாக சரி செய்யப்பட்டு, ஒரு கட்டத்தில் முற்றிலும் தீர்வு காணப்பட்டது; கடந்த இரு மாதங்களாக மின் வினியோகம் சீராக இருந்தது; பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். மாதாந்திர பராமரிப்பு நாள் தவிர, மற்ற நாட்களில் மின் வினியோகம் முழுமையாக இருந்தது. அவ்வப்போது ஏற்படும் மின் பழுதுகளால் தடைபட்ட மின் வினியோகமும், குறைந்தபட்ச நேரத்தில் சரி செய்யப்பட்டதால், மின் தடையில்லாமல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை இருந்தது. 


அதிரை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் சில தினங்களாக மின்தடை அதிகரித்து வருகிறது.""மின் பற்றாக்குறையை சமாளிக்க, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு செய்யப்படும் 20 சதவீத மின்தடையை 30 சதவீதமாக உயர்த்த, உயர்மட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ""மக்களை அதிகளவில் பாதிக்கும் இரவு நேர மின்தடையை தொடராமல் தடுக்க முயற்சித்து வருகிறோம்; காற்றோட்டம் மட்டுமின்றி, வெப்பநிலையும் தற்போது அதிகரித் துள்ளது; 38 டிகிரி அளவுக்கு வெப்பம் இருப்பதால், டிரான்ஸ்பார்மர்களின் எண்ணெய் டேங்குகளும் கொதிப்படைந்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.