N

11.3.11

ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் பதற்றம்


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
டோக்கியோ :ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று பயங்Publish Postகர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. மேலும் இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ரஷ்யா, இந்தோனேஷியா, தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.  இதுவரை இந்த சுனாமியினால் 22 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து 38.322 டிகிரி வடக்கும், அட்சரேகை 142.369 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலையின் உயரம் 10 முதல் 13 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தாக்கியதாக செய்திகள் தெரிவிகின்றன.

விமான நிலையங்கள் மூடல்!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் கட்டிடங்கள்  தீப்பிடித்து எரிகின்றன. டோக்கியோவில் இருந்து 400 கி.மீ தூரத்தில் பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி அலைகள் தாக்கியதில் வடக்கு கடலோரப் பகுதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

40 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 40 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சுனாமியால் 5 அணுமின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு துண்டிப்பு!

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் பலியாயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து சேத விவரம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஜப்பானில் பல துறைமுகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இடிஹாடா நகரில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிகிறது. சுனாமி அலைகள் தாக்கியதில் சென்டாய் துறைமுகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுனாமியால் பல படகுகள், கப்பல்கள் சேதமடைந்துள்ளன. 20 அடி உயரத்திற்கு ஆழிப் பேரலை தாக்கியது.

மேலும் சுனாமி அலையினால் அலுவலகம் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்தோனேஷியாவில் காலையில் பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.  ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஜப்பான் நாடாளுமன்றம் குலுங்கியது. இந்நிலையில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால் போதிய விவரங்கள் வெளியாகவில்லை.

சில மணி நேர இடைவேளையில் 2வது சுனாமி: 

சில மணி நேர இடைவேளையில் ஜப்பானை 2 வது சுனாமி மீண்டும் தாக்கியது. மியாகி, சென்டாய் நகரங்களை 30 அடி ஆழி பேரலைகள் மூழ்கடித்தன. 88 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி இதுவாகும். 


மீட்புப் பணிகள்!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 900 குழுக்கள் ஜப்பான் விரைந்துள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு மக்களுக்கு ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த சுனாமியால் அணு உலைகள் பாதிப்படையவில்லை என்று  ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!

மேலும் இந்த சுனாமியால் ஆசிய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பாதிப்பில்லை!

 இந்த சுனாமியால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை. மேலும் இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் ஜப்பானில் பணி நிமித்தமாக வசிக்கும் 22,000 இந்தியரின் நிலை என்ன? என்பது குறித்து தகவல் இல்லை. ஜப்பானில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளமுடியவில்லை. 

சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் கடலோர நாடுகளான ஆஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சிலி, பெரு, மெக்சிகோ மற்றும் ஹவாய் தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதுவரை சுனாமி!

இதுவரை சுனாமி!

1755 ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.
1883 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,000 பேர் பலியாகியுள்ளனர்.
1908 ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
1896 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.
1923 ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஒன்றறை லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
1933 ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,000 பேர் பலியாகியுள்ளனர்.
1960 ல் சிலியில் 23, 000 பேரும், 1976 பிலிப்பைன்சில் 8,000 பேரும் பலியாகியுள்ளனர்.
1998 ல் பப்பூவா நியூ கினியாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
2004 ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.