N

11.3.11

ஜப்பானுக்கு உதவி செய்ய தயார்: மன்மோகன் சிங்


கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் நாடோ கானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜப்பான் மக்களுக்கு இந்த சோகமான நேரத்தில் இந்தியா உறுதுணையாக இருப்பதாகவும், ஜப்பானுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நன்றி: Adirai Nagar 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.