தாம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். ராஜாவை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஏழைகள் நலம்பெற நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் கலைஞர் நல்லாட்சி தொடர திமுகவிற்கு வாக்குகேட்டு வந்திருக்கிறேன்.
ஏழை மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் கலைஞர். ஏழைகளுக்கு இலவசம் கொடுத்தால் ஒருவர் திட்டுகிறார். ஏழை மக்களுக்கு இலவசம் கொடுப்பதை தடுக்க நினைக்கிறார். ஏழை மக்களை பற்றி அவருக்கு கவலை கிடையாது.
சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் கட்சி ஆரம்பித்துள்ளார். நான் சினிமாவில் ஓடுகிற குதிரை. கருணாநிதி ஆட்சியில் ஏழைகளுக்கு நன்மை கிடைப்பதால் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக ஏழை மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வந்துள்ளேன்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்கிறவர், அந்தம்மாவை முதல் அமைச்சர் ஆக்குங்கள் என்று எங்காவது கேட்டாரா? முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதால் அ.தி.மு.க.வை அவர் கைப்பற்றுவார் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஏழைகளை பற்றி சிந்திக்காதவரை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்த திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். கலைஞர் சொன்னால் நிச்சயமாக வரும். ஆனால் அவர்கள் சொன்னால் வரும் ஆனால் வராது. இது பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும். முதல் அமைச்சர் கலைஞரை திட்டுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு வடிவேலு பேசினார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.