N

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

2.6.12

SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால்  நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முன்னதாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் M. அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இறுதியாக அதிரை SDPIன் நகர செயலாளர் S.முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

4.3.12

11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் புயல் பிரசாரம்!!

சங்கரன்கோவில் தொகுதியில் 6 நாள் பிரசாரம் செய்யவுள்ளனர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும்.

ஆறு நாட்களும், ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் புயல் வேகப் பிரசாரம் மேற்கொண்டு தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள், தே.மு.தி.க. வேட்பாளர் கே.முத்துக்குமார் வெற்றிக்காக மக்களிடம் வாக்குகளை சேகரிக்க தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

அவரது சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக ஆக்கும் வகையில் ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் விஜயகாந்தின் சுற்றுப்பயண விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து அவர்களும் கலந்து கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டிக்கு ஒரு நாள் மட்டும்:

தேமுதிகவின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மார்ச் 9ம் தேதி சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யவுள்ளாராம்.

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்குவதை கண்காணிக்க குழு அமைப்பு: தமிழக அரசு!!


 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் காலத்தில் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் மின் நிலைமைகளை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2010 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில் மின்வெட்டு உள்ள நேரங்களிலும் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும், ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதேபோன்று அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக்கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.

பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் இயக்குனர் (விநியோகம்) ஆகியோர் அனுப்பிய திட்டங்கள் பரிசீலித்து அரசு சில உத்தரவுகளையும் வழிமுறைகளையும், முதல்வரின் உத்தரவுக்கு இணங்க அமல்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.

1. ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி குழந்தைகளின் தேர்வுக்கு எந்தவொரு தடங்கலும் வராத வகையில் ஜெனரேட்டர் வழங்குவதை உறுதி செய்தவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். உறுப்பினராக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல் பொறியாளர், உறுப்பினர் செயலாளராக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை கல்வி அதிகாரி, மற்றொரு உறுப்பினராக பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்(கட்டிடங்கள்) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதியும் முடிவடைவதால் மார்ச் மற்றும் ஏப்ரல் காலங்களில் உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக இயக்குனர் கொடுத்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுப்பதற்கு உள்ள செலவினங்களை மாவட்ட குழு அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் மின் தேவையை அடைவதற்கு 5 கே.வி.ஏ. திறனுக்கு மேம்பட்ட ஜெனரேட்டர்களை வாங்க கூடாது.

2. ஒவ்வொரு அரசு பள்ளிகளும் மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் மின் செலவு ஏற்படுத்தக் கூடாது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இந்த தொகையின் 3-ல் 2 பகுதி தொகை (26 ஆயிரத்து 800 ரூபாய்) என்ற அளவை தாண்டக் கூடாது. ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்வது அவற்றை கையாளுவதற்கான உணவு செலவு, கேபிள்கள், வயர்கள் போன்ற மின் உபகரணங்கள் பொருத்துவது, எரிபொருள் செலவு போன்றவை இந்த அனுமதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 200 தொகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் அளிக்கும் மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் மட்டும் தான் பள்ளி நிர்வாகிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டும். மின்தடை நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளுக்கு ஆகும் வாடகை தொகையை மாவட்ட அளவிலான குழு அங்கீகரிக்கும். அரசு பள்ளிகளை பொருத்தவரையில் ஆரம்ப கட்ட செலவு பி.டி.ஏ. நிதி, சிறப்பு கட்டணம், மாவட்ட பொது தேர்வு நிதி ஆகியவை மூலம் செலவு எதிர்கொள்ளப்படும்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை பொருத்தவரையில் ஜெனரேட்டர்களை வெளியில் இருந்து அவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். விதிமுறைகளுக்கு உட்பட்ட சலுகையினம் அரசால் திருப்பி கொடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்காகும் செலவை, பள்ளி கல்வி இயக்குனரின் அனுமதியின் படி தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26.2.12

சங்கரன்கோவிலில் விஜயகாந்த் 5 நாள் பிரசாரம்!!


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் 5 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அக்கட்சி வேட்பாளராக க. முத்துக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் சங்கரன்கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவு திரட்ட அக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் திங்கள்கிழமை முதல் (பிப்ரவரி 27) பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிகிறது.

கட்சித் தலைவர் விஜயகாந்த் மார்ச் 5 முதல் தொகுதியில் முகாமிட்டு 5 நாள்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

10.2.12

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் புதிய விதிகள்!


"தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அதே சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவில் விதிகள் கொண்டு வரப்படும்,'' என்று சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் துவங்குவதற்கு முன், நோயாளிகளுக்கான தனி அறைகள் மற்றும் படுக்கைகள் குறித்த ஆய்வில், தமிழக சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபை மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின், நடந்த கருத்தரங்கில் விஜய் பேசியதாவது: 
 
தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் முதலாவதாக இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மருத்துவமனையின் டவர் 2வில் 81 படுக்கைகளும், நரம்பியல் பிரிவில் 20 படுக்கைகளும் தயார் செய்யப்பட உள்ளன.

இந்த மருத்துவமனையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், 1 கோடியே 8 லட்சம் ரூபாய் எஞ்சியுள்ளது. அந்த நிதியில் இருந்து, அறைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மருத்துவக் கருவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காப்பீட்டுத் திட்ட வார்டுகள் பொது மக்களுக்குத் தெரியும் வகையில், இந்த வார்டுக்கு, "500' என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த எண் பயன்படுத்தப்படும். தனியார் மருத்துவமனையில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

மேலும், அரசு மருத்துவமனையில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளி, அதே சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத வகையில் விதிகள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு, அனைத்து சிகிச்சைகளும் செய்வதன் மூலம், பொதுமக்கள் அரசு மருத்துவமனையை தேடி வருவர்.

ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் விகிதத்தில், நான்கு ஆண்டிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். புதிய காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டைகள் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும்.நோயாளியின் தொகையில் 15 சதவீதம் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைக்கும், 25 சதவீதம் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கும், 60 சதவீதம் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் ஒதுக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

19.10.11

அதிரையில் குழப்பம்!!

இன்று நடக்க உள்ள உள்ளாட்ச்சி தேர்தலுக்கு இன்னும் சில மணிதுளிகளே உள்ள நிலையில் நேற்று (18.10.2011) இரவு பரபரப்பான நோட்டீஸ் விநியோகமானது.

இதற்க்கு அதிரை இணையதளம் ஒன்று  நோட்டீக்கு எதிராக செய்தியை வெளியிட்டுள்ளது இதனால் பொது மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர்.யாருக்கு வாக்களிப்பதென்று குழப்பம் ஏற்பட்டதுள்ளது. 

இதற்க்கு முன் இணையதளங்கள் வாரியாக வெளியிடபட்ட கருத்து கணிப்பில் பெரும் மற்றம் ஏற்படளாம் என்று கூறப்படுகின்றது.








27.5.11

அதிமுக தோழமை கட்சிகள் சமச்சீர் கல்வி தொடர ஆதரவு: நான் எழுதிய பாடலை நீக்குவது தவறல்ல: கலைஞர்

தமிழகத்தில் கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசு முறையாக ஆய்வு செய்து, படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு திடீரென கிடப்பில் போட்டது ஏன் என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார். 


திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. 

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. 

இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. 

சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர். 

அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. 

கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?

சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன. 

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?

அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?

திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

16.5.11

முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி - மமக புறக்கணிப்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான  மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது.  
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலவராக செல்வி ஜெயலலிதா இன்று ஏற்றார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் 33 பேரும் ஏற்றுக்கொண்டனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த இந்த விழாவில்  கவர்னர் பர்னாலா முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட பலருக்கும் ஜெயலலிதா அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த அழைப்பினை ஏற்று நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, அஜீத்சிங் ஆகியோரும், அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர்  விஜயகாந்த், இந்திய  கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன்,  தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான  மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி inneram web site

15.5.11

விஜயகாந்துக்கு விஜய் வாழ்த்து!

மக்கள் இயக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

அதே போல் இயக்குனர்கள் சேரன், அமீர், நடிகர்கள் விஜயகுமார், வையாபுரி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


இதே போன்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பொதுநல அமைப்பினர் என பல தரப்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
எதிர்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்க இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் விஜய் மற்றும் திரையுலகினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அதிமுகவுக்கு அடுத்த படியாக தேமுதிக வெற்றி பெற்று உள்ளதால் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 

தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்தை .

சோனியா விருந்துக்கு செல்வீர்களா? :ஜெ. பதில்


தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
நாளை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?

எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

ஏற்கனவே கடந்த 13-ந்தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.

மீண்டும் கேட்கிறோம், உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்?

முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.

எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?
முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?

இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?
 நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.
 

 நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?

நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.
 

விஜயகாந்திற்கு அழைப்பு விடுப்பீர்களா ? ஜெ. பதில்


அதிமுகவின் பதவி ஏற்பு  விழாவில்  கலைந்துகொள்வீர்களா என விஜயகாந்திடம் கேட்டதற்கு,  அழைத்தால் அதுபற்றி முடிவு செய்வேன்’’ என்று கூறினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து புதிய அரசு அமைக்க அனுமதி கோரி கடிதம் அளித்தார்.
    எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலு வலகத்தில் கூடினர்.    

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பதவியேற்பு நடைபெறுகிறது. 

பகல் 12.15 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடபெறும் என்று  தலைமைச்செயலர் மாலதி  தெரிவித்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகளுக்கும் அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.   

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,   ‘’பதவியேற்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகள அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  மின்வெட்டை சீர் செய்ய முன்னுரிமை தரப்படும்.  பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று தெரிவித்தார்.

5.5.11

தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் முடிவு!!


ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.

மே 13ஆம் தேதி மாலையே முழு முடிவுகள் வெளியாகும். ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும். பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரு மாதம் தாமதமாகிறது என்றார்.

18.4.11

40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டேன் என்று கூறும் சீனிவாசனுக்கு வாழ்த்துமழை




தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 13ம் தேதி நடந்து முடிந்தது.    மே-13 ம்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.


இந்நிலையில் தான் 40 தொகுதிகளில் போட்டியிட்டதாகவும்,  நாற்பதிலும் வெற்றிபெற்றுவிட்டதாகவும் வலம் வரும் நபரை வாழ்த்தி வருகின்றனர் மக்கள்.

முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  எனக்கு ஒதுக்கிய 40 தொகுதிகளிலும்  தானே வெற்றி பெற்றதாக கூறி கலக்குகிறார் சீனிவாசன் .
முத்துபேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மகாலிங்கம் சீனிவாசனுக்கு மாலை அணிவித்து வெற்றி வாழ்த்து கூறினார்.
இது போல் ஏராளமானோர் மாலை அணிவித்து கோமாளித்தனத்துக்கு ஊக்கம் அளித்தனர்.

நன்றி நக்கீரன் 

14.4.11

41 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்


நடைபெற்ற தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் போது விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த விஜயகாந்த், ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோடு, மேலபழங்கூர், சீர்பனந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குச் சாவடிகளை பார்வையிட்டார்.

பகண்டை கூட்டுச் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், 

அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நல்ல முறையில் உள்ளது. நான் பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறேன். நான் சென்ற இடங்களில் பார்க்கும்போது வெற்றி 
பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனது உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனாலும் நான் தொகுதியை பார்க்க வந்துள்ளேன்.


இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ரிஷிவந்தியம் தொகுதிக்கு இணைப்புச் சாலை இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் இங்கு இணைப்புச் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

12.4.11

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: விஜயகாந்த்துக்கு நோட்டீஸ்


இந்திய ராணுவத்துக்கு எதிராக பேசிய தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

டி.எஸ். ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 

கடந்த மாதம் 24ஆம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், உங்கள் வியூகம் என்ன என்ற கேள்விக்கு, கார்கில் போர் நடந்த போதும், பாகிஸ்தானுடன் மோதும் போதும், ராணுவத்தினர் திட்டமா போட்டு எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்குமோ அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்றும், அதனால் தேமுதிக கட்சியின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முடிவை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விஜயகாந்த் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தல் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தவிட்டது.

வெற்றி பெற்றால் உங்களின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்? கலைஞர் பதில்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.
 


கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் கையெழுத்தாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் கையெழுத்திட்டீர்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
அது எந்த கையெழுத்தாக இருந்தாலும், அந்த கையெழுத்து ஏழை எளிய, பாட்டாளி மக்களின் வறுமையை போக்குகின்ற வகையில் இருக்கும் என்றார்.

நான் 100 சீட் கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார்!!

விஜயகாந்துடனான விவகாரத்திற்கு பிறகு அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்தார் வடிவேலு. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டார்.

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பட்டுக்கோட்டை பிரச்சாரத்தின் போது அதிர்ச்சி குண்டை வீசினார்.

’உங்களுக்கெல்லாம் நான் ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன். இதுவரை சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன். வடிவேலு உனக்கு சீட் எதுவும் வேணுமா என்று கலைஞர் என்னிடம் கேட்டார்.

அதெல்லாம் வேணாம்யா. உங்களுக்கு ஆதரவா நான் பிரச்சாரம் செய்யுறேன் என்று சொல்லிவிட்டேன். எனக்கு கட்சி ஆரம்பிக்கனும் என்று ஆசை இருந்தா நான் 100 சீட் கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார்’’ என்று மிகப்பெரும் அதிர்ச்சி குண்டை மிகச்சாதாரணமாக வீசினார்.

சிந்திக்கவும்: அட இதுதான் வடிவேலு அடித்த காமடியில் பெரிய காமடியாக இருக்கும். ஆளும் கட்சி காங்கிரசுக்கே அடித்தார் ஆப்பு. அவர்களை சி பி ஐ ரைடுவரை நடத்திதான் இந்த சீட்டை பெற்றுள்ளார்கள். உங்களுக்கு நூறு சீட்டா கனவில் கூட கிடைக்காது

10.4.11

பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம்: பிரதமர்


எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். தமிழகம் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சிபெற தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள் என்று கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை பீளமேடு கொடிசியா மைதானம் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது: 

நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்ட மறைந்த ராஜாஜி, நேருவோடு இணைந்து செயல்பட்டதை நாம் மறக்க முடியாது. இதேபோல இந்திரா காந்தியோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காமராஜர் மற்றும் ராஜீவ்காந்தியின் தீவிர ஆதரவாளரான மூப்பனார் ஆகியோரின் செயல்பாடுகளை நாம் மறக்க முடியாது.

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடு இணைந்து செயல்படும் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு கொடுத்த ஒத்துழைப்பினால் டெல்லியில் எனது தலைமையிலான அரசாங்கம் நிறைய பலன்களை பெற்றது. தமிழக தலைவர்களின் முயற்சியினால் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதில் காங்கிரஸ் கட்சி பெருமைகொள்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் கரத்தையும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கரத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு கேட்டு உங்கள் முன்பு நான் நிற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து பணியாற்றி தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளன. இதற்கு காரணமான தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை நான் பாராட்டுகிறேன். கருணாநிதியின் சீரிய தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு மாதிரி மாநிலமாக விளங்குகிறது.

நமது அரசாங்கம் பெண்களின் அந்தஸ்தை உயர்த்த உறுதி பூண்டு இருக்கிறது. நாம் இப்போது பஞ்சாயத்து ராஜில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து இருக்கிறோம். அதைப்போலவே நாடாளுமன்றத்திலும் அந்த இடஒதுக்கீட்டை அளிப்பதில் உறுதிபூண்டு இருக்கிறோம். பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு ஆய்ந்து, இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் முதல்நிலையில் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு என்று அறிவித்து இருப்பதை நான் படித்தேன்.

நீங்கள் உங்களுடைய வாக்குகளை ஆராய்ந்துதான் சீர்தூக்கித்தான் அளிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அதில் எனக்கு சந்தேகமே கிடையாது. ஏன் என்றால் தமிழ்நாட்டு மக்களின் அறிவில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் சொல்கிறேன், எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளால் நீங்கள் தடம்மாற மாட்டீர்கள் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். எனவே நான் உங்களை மீண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து நாம் ஒன்றுபட்டு உழைத்து தமிழ்நாட்டினுடைய வருங்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்று உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்து இருக்கிற சாதனைகள் எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய வாக்குகளை சாதனையின் அடிப்படையில், நீங்கள் அளிக்க வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு நம்முடைய முக்கியமான சிறப்பு திட்டங்களால், தமிழ்நாடு மிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே போன்று நம்முடைய திட்டங்களால், 2008 ல் உலக பொருளாதார நெருக்கடி வந்தபோது கூட, 8 சதவீத வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தொட்டு இருக்கிறோம் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பாரத் நிர்மாணத்தின் மூலம் கிராமபுற வளர்ச்சியினை அதனுடைய உள்கட்டமைப்பினை, கிராமபுற சாலைகளை, கிராமபுறத்திற்கு இருக்கின்ற மின்வசதிகளை, அங்கிருக்கிற நீர்பாசன வசதிசளை எல்லாம் நாம் செய்துகொடுக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு அளிப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திற்கும் 100 நாட்கள் கண்டிப்பாக வேலை என்று சொல்கிற உறுதிமொழியை செயல்படுத்தி வருகிறோம். அதே போன்று ஒவ்வொரு குழந்தைகள் அவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் கல்வி உரிமையை அளித்து, அவர்களுக்கு அறிவு வளர்ச்சியை நாம் உறுதி செய்கிறோம்.

அதே போல் தேசிய உடல்நல மையத்தின் மூலம் இந்த நாட்டில் இருக்கிற மக்கள் ஒவ்வொருவருடைய உடல்நலத்தை பேணுகிறோம். அதே போல் நம் விவசாய உற்பத்தியை பெருக்குவதோடு, அவர்களுக்கு கட்டுபடியான விலையை கொடுப்பதற்கும், நாம் வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் எல்லோருக்கும் உணவு என்பதனை உறுதி அளிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் நம்முடைய அரசாங்கம், வெளிப்படையாக, ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெறுகிறது. அப்படி நடைபெற வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமை சட்டத்தை, நாம் நிறைவேற்றி உள்ளோம்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் சட்டரீதியாக சில தடைகள் ஏற்பட்டு உள்ளன. அந்த தடைகளையெல்லாம் நீக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்.

காங்கிரசும், அதனுடைய கூட்டணி கட்சிகளும், சாதாரண பொதுமக்களின் தேவைகள் என்ன என்பதனையும், எல்லா இனத்து மக்களின் உணர்வுகளையும் தெரிந்து வைத்து இருக்கிற கட்சிகளாகும்.

காங்கிரஸ் தலைமையில் இருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சமுதாய ரீதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிற மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், மலைவாழ் மக்களையும், பின் தங்கியவர்களையும், சிறுபான்மையினரையும், பெண்களையும், குழந்தைகளையும் கவனித்து அவர்களுக்கு ஆவன செய்கிறது. சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு அவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, 90 மாவட்டங்களை எடுத்து, அவர்களுக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.


இப்போது தமிழகத்து மக்களை போல் சமூக நீதியை புரிந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது, காங்கிரசுக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும், நிச்சயமாக அவர்கள், எல்லோருக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பதற்கு, நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

அரசியலில் விஜயகாந்த் “எல்.கே.ஜி.”ன கருணாநிதி காலேஜ்; வடிவேலு தாக்கு


தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து நடிகர் வடிவேலு வல்லம் மற்றும் தஞ்சையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் எழுச்சி, மகிழ்ச்சி, ஆரவாரம் உள்ளது. மனசு ரீதியாக உங்கள் எல்லோரையும் நான் சிரிக்க வைக்கிறேன். அது எனது வேலை. பொதுவாக மக்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பது அரசு வேலை.
 
அந்த வகையில் மக்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு சிறப்பாக செய்து கொடுத்துள்ளது. நான் பலமுறை உங்களை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை.
 
இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய, பாமர மக்கள் அனைவரும் பயனடைந்து உள்ளனர். கருணாநிதி பல சாதனைகளை நிறைவேற்றி உள்ளார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சியினர் காப்பி அடித்துள்ளனர்.
 
இது மக்களிடம் எடுபடாது. முதல்-அமைச்சர் கருணாநிதி 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். விஜயகாந்த் சினிமாவில் நல்லவர் போல் நடித்து மக்களை ஏமாற்றுகிறார். அவரது கல்யாண மண்டப தூணை இடித்து விட்டதால் கட்சி ஆரம்பித்து கருணாநிதியை ஒழிப்பேன் என்கிறார்.
 
விஜயகாந்திற்கு அரசியலே தெரியாது. அவர் அரசியலில் ஒரு எல்.கே.ஜி. கருணாநிதி காலேஜ். அவர் கேப்டன் என்றால், நான் டாப்டென். யாரும் யாருடைய புகழை திருடக்கூடாது. ஆனால் விஜயகாந்த் எம்.ஜி.ஆர். புகழை திருடுகிறார்.
 
அதை தட்டிக்கேட்க முடியவில்லை. விஜயகாந்த் தனது வேட்பாளரையே அடிக்கிறார். இதனால் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அவர் கூட பிரசாரம் செய்யபயப்படுகிறார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.
 
விஜயகாந்த் எங்கு சென்றாலும் விடமாட்டேன். அவரை புழுதிபுயலாய் தொடருவேன். ஏப்ரல் 13-ந்தேதி உங்கள் வாக்குகளை உபயதுல்லாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நடிகர் வடிவேலுவுடன், மத்திய மந்திரியும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான பழனிமாணிக்கம், வேட்பாளர் உபயதுல்லா ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சோம.செந்தமிழ்ச்செல்வன், கவுன்சிலர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, சண்.ராமநாதன், முன்னாள் கவுன்சிலர் தர்மராஜன், காங்கிரஸ் நகர செயலாளர் கோவி.மோகன், துணைத்தலைவர் சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.                                             

விஜயகாந்த டெபாசிட் இழப்பார்: வடிவேலு


விஜயகாந்த டெபாசிட் இழப்பார் என, நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.


இந்நிலையில் நடிவர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.