N

12.4.11

தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: விஜயகாந்த்துக்கு நோட்டீஸ்


இந்திய ராணுவத்துக்கு எதிராக பேசிய தேமுதிகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

டி.எஸ். ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 

கடந்த மாதம் 24ஆம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், உங்கள் வியூகம் என்ன என்ற கேள்விக்கு, கார்கில் போர் நடந்த போதும், பாகிஸ்தானுடன் மோதும் போதும், ராணுவத்தினர் திட்டமா போட்டு எதிர்கொண்டனர். எந்த நேரத்தில் எது நடக்குமோ அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்றும், அதனால் தேமுதிக கட்சியின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முடிவை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விஜயகாந்த் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தல் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தவிட்டது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.