N

Showing posts with label Adirai Salih. Show all posts
Showing posts with label Adirai Salih. Show all posts

29.5.14

அதிரை இணையதள கூட்டமைப்பு தொடக்கம்! (AWO)


அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. 

இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள் நடைப்பெற்றது.

தொடர்ச்சியாக பேசிய அதிரை ராஜேஸ் அவர்கள் "அதிரைக்கு என பல இணையதளங்கள் உள்ளன ஆனால் அவைகள் சிதறி கிடைக்கின்றன அவைகளை ஒன்று இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட வேண்டும்" என்றார்.


மேலும் அதிரை பிறை நிருபர் M.R. முகம்மதுசாலிஹ் அவர்கள் கூறுகையில் "நாம் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும். ஊரின் ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நலன்களை காக்குவதே நமது குறிக்கோள்" என்றார்.

இதனை அடுத்து பேசிய அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் Z.முகம்மது சாலிஹ் அவர்கள் " நமது நோக்கம் யாவும் ஒன்றே எனவே நாம் ஒன்றுப்பட்டு செயலாற்றுவது தான் சிறந்தமுறை ஆகும். எந்த நேரத்திலும் நாம் ஒற்றுமை என்னும் கைற்றை விட்டு விடக்கூடாது. நாம் தற்பொழுது ஊடகம் என்னும் முக்கிய பொறுப்பில் உள்ளோம் ஊரில் யார் பொதுமக்களுக்கு சேவைகள் செய்யாமல் தங்களது அரசு பொறுப்பை தவறாக பயன்படுத்துகின்றனரோ அவர்களில் போலி முகத்திரையை நாம் கிழிக்க வேண்டும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவர்களின் உண்மை முகம் அறிந்து வாக்களிக்க நாம் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்" என்றார்.

கடைசியாக அதிரைக்கு என தனி இணையதள கூட்டமைப்பு Adirai Web Organization (AWO) உருவாக்கி செயல்படுவது என தீர்மானம் ஏற்றப்பட்டது.

இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள இணையதளங்கள் விபரம்:





இப்படிக்கு



24.1.14

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி


40-வயதுக்கு மேல் லேசான நெஞ்சுவலி வந்தாலும் இசிஜி எடுத்து உண்மையான மாரடைப்பை உணர்ந்து கொள்ளலாம். சாதாரண தசைவலி,  வாய்வுப்பிடிப்புகள், வயிற்றுவலி போன்றவை கூட நெஞ்சில் வலியை ஏற்படுத்தும். எனவே 40-வயதுக்கு மேல் இசிஜி எடுத்துப் பார்த்துக்கொள்வது  நல்லது. 


இரத்தத்தில் கொழுப்புச்சக்தி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இரத்தக் குழாயை அடைக்கும் இரத்தம் உறைந்த கட்டிகள்  வுலீசழஅடிரள உண்டாகாமல் காக்கலாம். மதிய உணவு தடபுடலாக சாப்பிட்டதும், உடனே படுத்து உறங்கககூடாது. அப்போது இரத்த ஓட்டம்  மெதுவாகச் செல்லும். அதுவும் அந்த அடைக்கும் கட்டிகள் உண்டாகக் காரணமாகும். 



குளிர்காலத்தில் குளிர்ந்தநீரில் குளித்தலாகாது. குளிர் இரத்தக் குழாய்களைச் சுருங்கச்செய்யும். அதிக கோபம். அதிக துக்கம், அதிர்ச்சிகள் இவற்றால்  இதயம் தாக்கப் படக்கூடாது. எதையும் தாங்கக்கூடிய சக்தி இதயத்திற்கு வேண்டும். புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் அறவே  கூடாது. 



இரும்பு சக்தி குறைதல், வைட்டமின் பி2, பி12, குறைதல், வைட்டமின் சி குறைதல், வயிற்றில் பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சுதல், இவையெல்லாம்  இரத்த சோகைக்கு காரணங்கள். நல்ல காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பால், முட்டை, இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சோகை வராமல்  தடுக்கலாம். சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு எளிதில் ஏற்படும். 

27.10.12

தியாக திருநாள் வாழ்த்துக்கள்


15.9.12

Android App For Adirai Blogs


New android App available for Adirai Blogs.


Easy Way To Browse

                                           





















அதிரை இணையதங்களை உங்கள் கைபேசியில் சுலபமாக காண்பதற்கு இந்த  (Android App)  நீங்கள் (Download) செய்து கொள்ளுங்கள்.

20.8.12

மருதாணி பயன்படுத்திய குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பரபரப்பு!


மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.

பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.

அதிரை தண்டர்

3.8.12

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..!

புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.

ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை திறமையாகக்கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு.
(புகாரி, முஸ்லிம்).
ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்- லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விஷயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.


நன்றி: ஐடியல் விஷ
ன் 

6.6.12

AXகல்வி விருது 2012 வழங்கும் விழா!!

அதிரையில் +2 மற்றும் பத்தாம் வகுப்பில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களை கவுரவிக்கும்முகமாகவும் மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி அவார்டு இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெறும் அனைத்து முஹல்லாஹ் 6வது கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் ஆசிரிய பெருந்தகைகள் என பெரும்பாலலோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கேடயமும் ரொக்க பரிசுகளும் வழங்க உள்ளனர்  . 


இந்த முக்கியம்வாய்ந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடைபெற உள்ளதால் சக வலைதளத்தார்களும்,துடிப்புமிக்க இளம் எழுத்தாளர்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ள அதிரைசெய்தி  கேட்டுகொள்கிறது.



பன்னிரெண்டாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : மாணவி எம். ஆஃப்ரீன் பானு,
மதிப்பெண்கள் : 1160 / 1200
பரிசுத்தொகை : ரூ 5000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி

இரண்டாம் பரிசு :
பெயர் : எம்.ரிஹானா.
மதிப்பெண்கள் : 1147 / 1200
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாம் பரிசு :
பெயர் : ஜாஃப்ரின்
மதிப்பெண்கள் : 1137 / 1200
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : ஜஃபருல்லாஹ்/உபயதுல்லாஹ்


முதலிடம்
ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி


முதல் பரிசு : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : M.நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )

இரண்டாமிடம்

நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி


இரண்டாம் பரிசு : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா

மூன்றாமிடம்

சமீரா:461/500 இமாம் ஷாஃபி  மேல். பள்ளி
மூன்றாம் பரிசு : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ்



சிறப்பு பரிசுகள் :

இஃபாத் ரஹ்மான்
முதலிடம் கா.மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1048/1200

எஸ் ஃபாத்திமா 
முதலிலிடம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1027/1200

2.6.12

SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால்  நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முன்னதாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் M. அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இறுதியாக அதிரை SDPIன் நகர செயலாளர் S.முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

12.5.12

அரசு வேலை விழிப்புணர்வு & வழிகாட்டி முகாம்!


கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா என்கிற தேசிய மாணவ இயக்கத்தின் சார்பில் அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் அதிரையில் நடைப்பெற உள்ளது.
அரசுத்துறையில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறந்தள்ளப்படுவது ஒருபுறம் இருக்க, துரதிஷ்டவசமாக இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் அரசு பணிகளுக்கு செல்வது குறித்து சிந்திப்பது கூட இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நமதூரை சார்ந்த படித்த இளைஞர்கள் சரியான விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லாததால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதும் இல்லை.
இதனை மாற்றும் நோக்குடன் தான் தேசியளவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விளைந்த மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் எதிர்வரும் 26.05.2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் “அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம்” நடைப்பெற உள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் – ன் ஒருங்கிணைப்பாளர் ரசுலுதீன் தலைமையில் நடைப்பெற இருக்கும் இம்முகாமை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி துவக்கி வைக்க உள்ளார்.
அரசு வேலை குறித்து பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வரும் திருச்சி M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் P.M. மன்சூர் அவர்களும், புதுச்சேரி அரசு கல்வி துறையின் இணை செயலாளர்          L. முஹம்மது மன்சூர் அவர்களும் கலந்துக் கொண்டு வழிகாட்ட உள்ளனர்.
பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் +2 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவு செய்ய கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீமை 95006 99858 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளவும். 

4.5.12

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.
1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு அதுவும் ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்”  என தனது இளைய இந்தியா பத்திரிகையில்(youn inddia)காந்தியடிகள் சிலாகித்தார்கள்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார். (‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).
ஹைதர்அலி ஃபக்ருன்னிஸா தம்பதியினருக்கு 20/11/1750  அன்று திப்புசுல்தான் பிறந்தார். விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி!
பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர்அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தை காட்டினார் தந்தை ஹைதர்அலி.
போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.
தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.
கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.
திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார்.
ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப்போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார்.
தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும் போது நபி(ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.
ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜருக்கு முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.
இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து படித்தார். குர்ஆனை தானும் படித்து, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் படிக்குமாறு வலியுறுத்தினார்.
தன் பிள்ளையை படிக்கவைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது கூற்று.
இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்புசுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000-க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒருபன்மொழிப் புலவர். உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.
திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச்சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்த மண்ணில் வேரூன்ற விடமாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார்.
அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.
1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமது மக்களின் சமுதாய,பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மதுவை காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய்துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல்படுத்தினார்.
விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார்.
1790ல் காவிரியின் நடுவே அணைகட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு.
இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலியனுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். தனது தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப்பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூலகத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நுல்களும் கண்டெடுக்கப்பட்டன.
திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர்களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்கம், வெள்ளி நாணயங்களிலும் கலீஃபாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதிலும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன்படுத்தினார்.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நான் பயிற்சிபெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக்கூடமான வாலோபஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒருபோர்க்களத்தின் மிகப்பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.
அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப்போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.
“திப்புவின் தாய்மண்ணே நினைவு கூறத் தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை, உலகின் மறுகோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர் தளமான நாசாவில் நினைவுகூறப்பட்டு ஓவியமாக நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தந்தது” இவ்வாறு அப்துல்கலாம் எழுதியுள்ளார்.
இறுதியாக மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயருடன் போரிட்டார். இறுதியாக தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை.
தன் வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் 1799, மே 4 அன்று திப்பு ஷஹீதானார். இந்திய விடுதலைக்கு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக் குர்ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன.
* யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் *

ஆங்கிலத்தில் மின்னஞ்சலா? இனி உங்க மொழியிலேயே படிக்கலாம்


ஹைதராபாத்:ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.
ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.
இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

22.4.12

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தஞ்சையில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம்.


முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 22ம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.ஐ.ஏ.எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது.
இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து வாகன பேரணிகள், தெரு முனை பிரசாரங்கள், பாடல்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள் மூலம் விழயிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாநில செயலாளர் கூறினார்.

உணவில் நச்சுத்தன்மை: கே.எஃப்.சிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!


KFCசிட்னி:நச்சுத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டதால் ஏழு வயது சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உலகில் பெரும் செல்வாக்குடன் திகழும் கே.எஃப்.சி(கெண்டகி ஃப்ரைட்சிக்கன்) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய குடும்பத்தினருக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.
2005 அக்டோபர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கே.எஃப்.சி நிறுவனத்தின் நச்சுத்தன்மை கலந்த ஃபாஸ்ட் ஃபுட்டை சாப்பிட்டதால் மோனிக்கா ஸமான் என்ற ஏழு வயது சிறுமிக்கு மூளை ஸ்தம்பித்துப் போனதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கே.எஃப்.சி உணவை சாப்பிட்டதால் தங்களது மகளுக்கு இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டதாக கூறி 10 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கோரி மோனிக்காவின் குடும்பத்தினர் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
கே.எஃப்.சியின் ட்விஸ் டர்ராப் என்ற உணவை சாப்பிட்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைப் போலவே இந்த உணவை சாப்பிட்ட பல குடும்ப அங்கத்தினர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கே.எஃப்.சி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12.4.12

"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்" - அஃப்ரீனின் தாயார்

"என் குழந்தையை கொலை செய்த என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் அவரைத்  தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்,'' என்று பெங்களூரில் தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த தாய் ரேஷ்மா கதறினார்.
தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் வெறுப்புற்ற உமர் ஃபாரூக் என்பவர் அப்பச்சிளம் குழந்தையை அடித்து உதைத்து சிகரெட்டால் சூடுவைத்து  சித்ரவதை செய்தார். சித்திரவதையால் அக்குழந்தை நேஹா அஃப்ரீன் படுகாயமுற்றது.  காயங்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பால் நேற்று பரிதாபமாக இறந்தது.

பேணி வளர்க்க வேண்டிய பெற்ற தந்தையே கொடூரமாக நடந்துகொண்டதால் அந்த சிசுவின் அகால மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது. குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து சித்திரவதை செய்த உமர் ஃபாரூக் கைது செய்யப்பட்டுள்ளர். உமர் ஃபாரூக் குடிபழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது.

குழந்தையை கொடுமைப்படுத்தியதாக போடப்ப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சுமந்து பெற்ற மகவை பறி கொடுத்த ரேஷ்மா  ""என் குழந்தையை கொலை செய்த என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்'' என்று கூறி கதறி அழுதார்.