N

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

4.5.12

ஆங்கிலத்தில் மின்னஞ்சலா? இனி உங்க மொழியிலேயே படிக்கலாம்


ஹைதராபாத்:ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.
ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.
இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

26.2.12

செல்போன் பயன்படுத்துவோரே! எச்சரிக்கை!


ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல்போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.

இந்த நிலையில் செல்போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல்போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல்போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்சனைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார். 
கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல்போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.
  

ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல்போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
  

இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல்போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 
பல் வேறு நாடுகளில் இப்படி செல்போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர். 
துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல்போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.


ஆனால் செல்போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல்போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:


  1. செல்போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல்போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.
  2. குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல்போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.
  3. செல்போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல்போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
  4. சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.
  5. மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல்போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.
  6. நம் உடல் செல்போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல்போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல்போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல்போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
  7. காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல்போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல்போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல்போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  8. முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.
அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல்போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

11.2.12

பெட்ரோலுக்கு `குட்பை` சோலார் பைக் ரெடி!!!

சோலார் மோட்டார் பைக் "ரெடி': பெட்ரோல், மின்சாரத்துக்கு "குட்பை' மதுரை மாணவர்கள், மின்சக்தியால் இயங்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். கே.எல்.என்.பொறியியல் கல்லூரி எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திக் ,23, சாக்ஸ் பொறியியல் கல்லூரி மெக்கானிக் இன்ஜி., மாணவர் ஹரி இணைந்து இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர். 

சூரிய சக்தியை "சோலார் பேனல்' மூலம் சேகரித்து, மின் சக்தியாக மாற்றி பேட்டரியில் சேகரிக்கப்பட்டு, இந்த பைக் இயக்கப்படுகிறது. இதற்காக தனி சோலார் பேனல், எலக்ட்ரிக் ட்ரைவ் வீலர், மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை சூரிய ஒளியில் "சார்ஜ்' செய்யப்பட்டால் 30 முதல் 35 கிலோ மீட்டர் வரை இந்த பைக்கை ஓட்டலாம். 

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும், விலையேறி வரும் பெட்ரோல், பற்றாக்குறை உள்ள மின்சாரம் இவற்றுக்கு மாற்றாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. கார்த்திக், ஹரி கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வையடுத்து, மின்சாரத்தில் இயங்கும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஒரு நாளைக்கு 8 மணிநேர மின் தடையால் அதுவும் சாத்தியமில்லாமல் போனதால், சோலார் மூலம் இயங்கும் பைக் தயாரிக்க முடிவு செய்தோம். பழைய பொருள் விற்பனை செய்யும் சந்தையில் கிடைத்த பொருள்கள் மூலம் இந்த பைக் வடிவமைக்கப்பட்டது. இரவு இயக்குவதற்காக முகப்பில் சைக்கிளில் "டையனமோ லைட்' பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அலுவலகம் செல்வோர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பைக்கை வெயிலில் "பார்க்கிங்' செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது பயன்படுத்தலாம். ஒரு பைக் உற்பத்தி செய்ய தற்போது ரூ.60 ஆயிரம் செலவாகிறது. எங்களால் ரூ.25 ஆயிரத்துக்கு இந்த வகை பைக்கை உருவாக்க முடியும். அதற்காக "ஸ்பான்சர்' கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003ல் தொடர்பு கொள்ளலாம்.

ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு....


தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும் ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில்
நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும்.


அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம்.


தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

8.2.12

மாணவனால் தயாரிக்கப்பட்ட மூங்கில் மர செல்போன்!!!

மூங்கில் மூலம் ஒரு மாணவர் செல்போன் தயாரித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்கெபர்ஸ் புஷ் பகுதியை சேர்ந்தவர் கிரான்ஸ்காட் வுட் ஹவுஸ் (23). இவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவர். இவர் செல்போன்கள் தயாரிக்கும் படிப்பு படித்து வந்தார். 
 
செல்போன்கள் தயாரிப்பில் அனைவரது ஒட்டு மொத்த கவனத்தையும் கவர விரும்பினார்.
 
அதற்காக மூங்கிலினால் ஆன செல்போனை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.  அதற்காக, அவர் 4 வருடங்கள் வளர்ந்த இளம் மூங்கில் மரங்களை பயன் படுத்தினார். ஏனெனில் அது மிகவும் வளவளப்பு தன்மையுடன் உடையாத நிலையில் இருக்கும். 
 
இதில், மற்ற செல்போன்று, கேமரா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன. 
 
உலகிலேயே முதன் முறையாக மூங்கில் மூலம் செல்போன் தயாரித்து சாதனை படைத்த வுட் ஹவுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது குறித்து அவர் கூறும் போது, “செல்போனை நூதன முறையில் தயாரிக்க விரும்பினேன். அதற்காகத்தான் மூங்கிலை பயன்படுத்தினேன்” என்றார். 
மாணவர்களே! வாருங்கள் நாமும் சாதனை படைப்போம்! 

   நன்றி; நக்கீரன்.

17.1.12

நம்மிடமே கதிரியக்கம் இருப்பதால் கதிரியக்கம் குறித்து அச்சம் வேண்டாமாம்!



காய்கறிகளிலும், மனிதர்களிடமும், மருத்துவத் துறையிலும் இயற்கையாகவே கதிரியக்கம் உள்ளதால் அணுமின் நிலையத்தால் கதிரியக்கம் ஏற்படும் என யாரும் பீதியடைய வேண்டாம் என அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இயற்கை மற்றும் செயற்கை கதிர்வீச்சுகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் விஞ்ஞானி பரத்வாஜ் பேசியதாவது: கதிர்வீச்சுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் உள்ளன. அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு உள்ளதாக நினைக்க வேண்டாம். சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து கதிர்வீச்சு வெளிவருகிறது. 

இந்திய அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. அணுமின் நிலைய பகுதிகளின் கதிர்வீச்சு அளவும், மற்ற பகுதிகளின் கதிர்வீச்சு அளவுக்கும், எந்த வேறுபாடுமில்லை. எனவே அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு என பயப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிலும் கதிரியக்கம் உள்ளது. 

கதிரியக்கத்தால் புற்றுநோய் வருவதாக கூறப்படுவது தவறானது. மது, புகையிலை போன்ற பல்வேறு காரணங்களால் தான் புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதியில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் உடல்நலனை பரிசோதிக்க தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு நான்கு மாதங்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என கூறினார்.

15.1.12

பழைய செல்போன்களுக்கு ATMமில் பணம் பெற்றுக்கொள்ளும் வசதி



லாஸ்வேகாஸ்: 'ஏ.டி.எம்.' எந்திரங்கள் மூலம் பணம் மற்றும் தங்க காசுகள், தங்க கட்டிகள் மட்டும் பெற முடியும் என நினைக்காதீர்கள். தற்போது பழைய செல்போன்கள் எம்.பி.3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றை விற்பனை செய்து தரும் மையமாகவும் 'ஏ.டி.எம்.' எந்திரம் திகழ்கிறது.

இதற்காக அதிநவீன 'ஏ.டி.எம்.' எந்திரம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக்ஸ் ஏ.டி.எம். எந்திரம் ஒரு 'கப் போர்டு' அளவே உள்ளது. அதில், தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. அதில், உலோகத்தினால் ஆன பெரிய வாய் பகுதி உள்ளது. அதன் வழியாகதான் செல்போன்கள், சிறிய அளவு கம்ப்யூட்டர்கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்றவற்றை உள்ளே செலுத்த வேண்டும்.

இந்த எந்திரத்தின் 'நெட்வொர்க்' தொடர்பு நூற்றுக்கணக்கான எலெக்ட்ரானிக் கம்பெனிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விற்பனை செய்ய விரும்பும் செல்போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யும். அவற்றில் எந்த விலைக்கு விற்பனை செய்ய விரும்புகிறோமோ அந்த தொகைக்குரிய பட்டனை அழுத்தினால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய வகை ஏ.டி.எம். எந்திரம் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

25.12.11

மொபைலில் தமிழ்!!!


உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் தளங்களை பார்ப்பது சிலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கும்... இதனை சில settingகளின் மூலம் நிவர்த்தி செய்து உங்கள் கையடக்கதொலைபேசியில் வாயிலாகவே தமிழ் தளங்களை பார்வையிடலாம்....


மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை  

1.முதலில் உங்கள் போனில் ஒபேரா மினி
உலாவியை தரவிறக்கி மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்

2.மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் about:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 

3.தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்துsave செய்யவும்.

4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும் பிரச்சினை தீர்ந்தது.
 
இனி நீங்கள் எந்த தங்கு தடையும் இன்றி உங்கள் போனில் தமிழ் தளங்களைபார்க்கலாம்.