மூங்கில் மூலம் ஒரு மாணவர் செல்போன் தயாரித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்கெபர்ஸ் புஷ் பகுதியை சேர்ந்தவர் கிரான்ஸ்காட் வுட் ஹவுஸ் (23). இவர் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவர். இவர் செல்போன்கள் தயாரிக்கும் படிப்பு படித்து வந்தார்.
செல்போன்கள் தயாரிப்பில் அனைவரது ஒட்டு மொத்த கவனத்தையும் கவர விரும்பினார்.
அதற்காக மூங்கிலினால் ஆன செல்போனை தயாரித்து சாதனை படைத்துள்ளார். அதற்காக, அவர் 4 வருடங்கள் வளர்ந்த இளம் மூங்கில் மரங்களை பயன் படுத்தினார். ஏனெனில் அது மிகவும் வளவளப்பு தன்மையுடன் உடையாத நிலையில் இருக்கும்.
இதில், மற்ற செல்போன்று, கேமரா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
உலகிலேயே முதன் முறையாக மூங்கில் மூலம் செல்போன் தயாரித்து சாதனை படைத்த வுட் ஹவுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது குறித்து அவர் கூறும் போது, “செல்போனை நூதன முறையில் தயாரிக்க விரும்பினேன். அதற்காகத்தான் மூங்கிலை பயன்படுத்தினேன்” என்றார்.
மாணவர்களே! வாருங்கள் நாமும் சாதனை படைப்போம்!
நன்றி; நக்கீரன்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.