N

Showing posts with label இயக்க செய்திகள். Show all posts
Showing posts with label இயக்க செய்திகள். Show all posts

2.6.12

SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்




ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால்  நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முன்னதாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் M. அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார். இறுதியாக அதிரை SDPIன் நகர செயலாளர் S.முஹம்மது அவர்கள் நன்றியுரையாற்றினார்.

20.2.12

Final கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு

“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.



மாநில தலைவர்:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில

பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது.

முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)

மாநில துணைத் தலைவர்:

சாகுல் சஹீத் (ராம்னாடு)

மாநில பொதுச் செயலாளர்:

சத்தார் (திருச்சி)

மாநில செயலாளர்:

அராபாத் (திருநெல்வேலி)

மாநில பொருளாளர்:

முஹைதீன் (தஞ்சை)

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:

1. ராஜா முஹம்மது (மதுரை)

2. ஜமிஷா (மேட்டுப்பாளையம்)

3. அப்துல்லாஹ் (சென்னை)

4. பக்ருதீன் (மதுரை)

5. ஹனீப் (கோவை)

6. அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)


புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர்முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சி M.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர்P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக,கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன்அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.



9.1.12

பத்து கிராமங்களை பாப்புலர் ஃப்ரண்ட் தத்தெடுத்தது


முர்ஷிதாபாத்:மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பத்து கிராமங்களை சர்வ ஷிக்‌ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தத்தெடுத்ததாக சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் அறிவித்துள்ளார்.
10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் கிட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சியை அவர் துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் தவுலாதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பட்டதாரி மாணவர்களுக்கான இரண்டாவது கட்ட கல்வி உதவித் தொகையை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் நிகழ்ச்சியிலும் இ.எம்.அப்துற்றஹ்மான் கலந்துக் கொண்டார்.
டிசம்பர் 20-ஆம் தேதி முர்ஷிதாபாத்தில் துவங்கிய ‘ஸ்கூல் சலோ’ பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
ஆறு வயதிற்கும், 15 வயதிற்கும் இடைப்பட்ட அனைத்து சிறுவர்-சிறுமிகளும் பள்ளிக்கூடம் செல்வதை உறுதிச்செய்யும் வகையில் ‘ஸ்கூல் சலோ(பள்ளிச் செல்வோம்)’ பிரச்சாரத்தை தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இப்பிரச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்வி, சுகாதாரம், பொருளாதார தன்னிறைவு ஆகியவற்றில் முன்மாதிரி கிராமங்களாக மாற்றுவதற்கு 10 கிராமங்களை சர்வசிக்‌ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் தத்தெடுத்தது.
கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் நிறுவுவதற்கும், சுயத்தொழில் திட்டங்களுக்கும் அப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாப்புலர் ஃப்ர்ண்ட் பொருளாதார உதவியை அளிக்கும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு உறுப்பினர் ஒ.எம்.அப்துஸ்ஸலாம், பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கு வங்காள மாநில தலைவர் முஹம்மது ஷஹாபுத்தீன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

17.10.11

மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்குத் தீ


மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் கும்பகோணத்தில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைத் தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆம்புலன்ஸ்,  உடல்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கும் குளிர்பதனபெட்டி போன்றவைகள் மக்கள் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், 7 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவி்டடு தப்பிவிட்டனர். தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து போனது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி சோழபுரம் நகர தலைவர் முகமது பாரூக் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


27.8.11

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் மனு


புதுடெல்லி:சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதித்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் நடத்தும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள மேற்கண்ட மாநிலங்களுக்கு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அளித்த மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான மக்களின் அடிப்படை உரிமை அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்களின் மனதில் தேசப்பற்றையும், ஜனநாயக மதசார்பற்ற இந்தியா என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் இதர அமைப்புகளைப் போலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பில் பங்கேற்கவும், அதனை காணவும் வருகை தருகின்றனர். அமைதியாகத்தான் அணிவகுப்பு  எல்லா வருடங்களும் நடத்தப்படுகிறது என போலீஸ் பதிவேடுகளிலும், ஊடக செய்திகளிலிருந்தும் நிரூபணமாகிறது.
இவ்வளவு காலமாக அணிவகுப்பு தொடர்பாக எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஏதேனும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகள் பதிவுச் செய்யப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக போலீசிலும், இம்மாநிலங்களின் ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினரும் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை தடைச்செய்ய முயலுகின்றனர்.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் சுதந்திர தின அணிவகுப்பு மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள் கூட நடத்துவதற்கு அனுமதியை மறுத்துள்ளன. ஒவ்வொரு அமைப்புகளும் தனித்தனியாக சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்துவது சட்ட-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் என கூறி இத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அன்றைய தினம் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை.
பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆளும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில் பாரபட்சத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இவ்வாறு இ.அப்துற்றஹ்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களின் உரிமைகளை மறுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தலையிட வேண்டும் எனக்கோரி அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனையும் பாப்புலர் ஃப்ரண்ட் குழு சந்தித்து மனு அளித்துள்ளது.

16.8.11

அதிரையில் கண்டன ஆர்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற இருந்த சுதந்திர தின அணிவகுப்பு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வருகிற புதன் கிழமை (17-08-2011) அன்று கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுபற்றி விவரம் வருமாறு:

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் சார்பாக முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தை நிலை நிறுத்தும் வகையில் கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பை தமிழகத்தில் நடத்தி வருகின்றோம். நம் இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும், அவர்களின் தியாகங்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், முஸ்லிம் சமூகத்திற்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்திலும் இந்த சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகின்றோம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றினைந்து பாடுபட்ட சுதந்திரப் போராட்ட நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக்குடிம்கனின் உள்ளத்திலும் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக இந்த சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகின்றோம்.

கடந்த 3 ஆண்டுகளாக மதுரை, கும்பகோணம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடத்தியுள்ளோம்.

கடந்த அரசும் மைதானத்தில் நடத்த அனுமதியளித்தது. எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் மிகவும் அமைதியோடும், கட்டுப்பாடோடும் எல்லோரும் பாராட்டும் வகையில் நடத்தினோம்.

இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சிறப்பாக நடத்த தீர்மானித்து, கடந்த 20.07.2011 அன்றே முறைப்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம்.

இதற்கு அனுமதி வழங்காமல் மேண்டுமென்றே காலதாமதம் செய்து நேற்று (13.08.2011) சனிக்கிழமை அன்று சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்து மறுத்துவிட்டது காவல் துறை. நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு வழங்காமல் முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளுக்கு மாபெரும் துரோகமிழைத்துவிட்டது காவல்துறை.

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி விடக்கூடாது என்ற காழ்புணர்ச்சியோடு உளவுத்துறையும், காவல்துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளனர்.

சுதந்திர தின அணிவகுப்பை மறுத்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுத்து தடை செய்த இந்த மோசமான நிகழ்வு முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்ற காவல்துறையின் கெட்ட எண்ணத்தையும் பாரபட்சத்தையும் மட்டுமே காட்டுகிறது.

இதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெரும்பான்மையாக பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இது இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர் தியாகம் செய்த முஸ்லிம்களின் தியாகத்தை அவமதிப்பதாகும்.

சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் மூழ்கியிருக்கும் போது அந்த சுதந்திர தினத்தை கொண்டாடக் கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது பெரும் அநீதியாகும்.

காவல்துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும், சிறுபான்மை விரோதப் போக்கையும் கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை எவர் தடுத்தாலும் விடமாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறைசாற்ற, முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க, முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலைகடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட்டு  17 அன்று மாலை 4 மணியளவில்  நமதூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

15.8.11

சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு


நெல்லை:நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய சுதந்திர தினமான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள தமிழக காவல்துறைக்கு அவ்வியக்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “வருகின்ற 65-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்திடவும், பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. ஆனால் இவ்வருடம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு கொடுக்காமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.
அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகின்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தை துவக்கி வைத்தும், தங்களின் சதவீதத்திற்கு அதிகமான அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றும் இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் முஸ்லிம்கள். ஆனால், இப்படி போராடி பெற்ற சுதந்திர இந்தியாவின் நிலையோ, ஊழல், மறைமுக காலனியாதிக்கத்திற்கு வித்திட்டுவரும் வெளியுறவுக்கொள்கை, அராஜக, ஜனநாயக விரோத அடாவடி அரசியல், சமநீதியின்மை போன்ற பல்வேறு தீமைகள் நாட்டில் புரையோடி சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது முன்னோர்களின் தியாகங்களை செல்லாகாசாக்கிவிட்டது. இத்தகைய போராடி பெற்ற சுதந்திரத்தை ஜனநாயகரீதியில் பாதுகாத்திடவும் மற்றும் நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவுமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை வருடாவருடம் நடத்திவருகின்றது. இப்படி சீரிய சிந்தனையோடு நடத்தப்பட்டு வரும் சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் காவல்துறை சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுப்பதற்கு கையாண்ட முறை கண்டனத்திற்குரியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோதும் காவல்துறை திட்டமிட்டே இழுத்தடித்து அனுமதி மறுத்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தபோது இது போன்று அனுமதி மறுக்கப்பட்டபோது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றமும் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியது. அதேபோன்று இந்த முறையும், நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்கிற தீயநோக்கில் காவல்துறை செயல்பட்டுள்ளதுடன், கடந்த கால தீர்ப்புக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டுள்ளது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
காவல்துறையின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களின் உரிமையை மறுத்து செயல்பட்டுவருவதை குறித்தும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். எங்களின் நோக்கம் சுதந்திர தினத்தை அமைதியான முறையில் சிறப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அரசும் காவல்துறையும் சிறுபான்மையினர் மீது கொண்ட காழ்ப்புணர்வால் அவர்களை வன்முறையாளர்கள் என சித்தரிக்க முயற்சித்தும் சதி செய்தும் வருகின்றனர். அத்தகைய முயற்சி, சதிக்கு நாங்கள் ஒருபோதும் பலியாகமாட்டோம்.
கடந்த கால அரசு இதற்கு முந்தைய ஆண்டுகளில் முஸ்லிம்களின் இந்த சுதந்திர தின அணிவகுப்பு மைதானத்தில் நடத்த அனுமதித்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசோ சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுவதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் மூழ்கியிருக்கும்போது அந்த சுதந்திரதினத்தை கொண்டாட கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது பெரும் அநீதியாகும். இது முஸ்லிம் சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது கவலையில் ஆழ்த்தியுள்ளது.
களக்காடு, ஏர்வாடி, கடையநல்லூர், மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மக்களில் காவல்படையை குவித்து ஊரைச் சுற்றி காவல் தடுப்புகளை ஏற்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்தும் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் துவேஷமான இந்த மனித உரிமை மீறலை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கின்றது. அரசும் இதனை வேடிக்கை பார்ப்பது குடிமக்களின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகின்றது. காவல்துறை மற்றும் அரசின் இந்த உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.8.2011 அன்று மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை எவர் தடுத்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியை நாங்கள் பதிவுச்செய்ய விரும்புகின்றோம். இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில செயலாளர் ஃபைஸல் அஹ்மத், மாவட்ட தலைவர் அன்வர் முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

13.8.11

சுதந்திர அணிவகுப்பிற்கு தடை-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


கோழிக்கோடு:சுதந்திர தினத்தன்று ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திவரும் அணிவகுப்பிற்கு தடை ஏற்படுத்திய அரசின் நடவடிக்கையை உறுதிச்செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முந்தைய இடதுசாரி அரசின் குறுகிய அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி கடந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசும் அதே பாதையை பின் தொடர்ந்து அனுமதியை மறுத்துள்ளது. மாநில போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்திடம் ஆழமாக வேரூன்றியுள்ள வகுப்புவாத மனோநிலைதான் சுதந்திர தின அணிவகுப்பை தடைச் செய்வதன் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் பெயரால் பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தடை விதித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு இடத்தில் கூட சட்டம்-ஒழுங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இத்தடை பாரபட்சமானது மட்டுமல்ல ஜனநாயக விரோதமானதும், குடிமக்களின் சுதந்திரத்தை மறுப்பதுமாகும்.
நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட எல்லா குடிமக்களுக்கும் பிரிவினருக்கும் உரிமையுண்டு. இந்த உரிமைதான் இங்கு மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட நினைவுகளை உணர்த்தி தேசத்தின் மீதான பற்றிற்கு உத்வேகம் அளித்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி பெரும் மக்கள் பங்களிப்பையும், வரவேற்பையும் பெற்றது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான உரிமை கிடைக்கும் வரை சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராட்டம் தொடரும். இக்கூட்டத்திற்கு கேரள மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார். பி.அப்துல்ஹமீத், டி.கெ.அப்துஸ்ஸமத், கெ.ஹெச்.நாஸர் ஆகியோர் உரையாற்றினர்.

17.7.11

அதிரை PFI யின் அணிவகுப்பு

                                                     அஸ்ஸலாமு அழைக்கும்


                                    'வாருங்கள் சுதந்திரதின் பாதுகாவலர்களாக'

               பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  நடத்தும் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தின அணிவகுப்பிற்கான ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மைதானத்தில் வருகின்ற 17/07/2011 அன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது (மாலை 2:30 மணி முதல் 6:00 மணி வரை சீருடை அணிந்த வீரர்களின் அணிவகுப்பு நடைபெறயுள்ளது).

               இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக PFI யின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞ்ர் N.முஹம்மது ஷாஜஹான்.B.Sc.,B.L., அவர்கள் வருகை தருகிறார்கள்.

12.6.11

கோடீஸ்வரர்களின் உண்ணாவிரதம் ஊழலை ஒழிக்காது!!

JUNE 12, ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய, சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் ஹிந்துத்துவா வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது குறித்து விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

இதுபோன்ற போராட்டங்களின் மூலம் ஹிந்துத்துவா சக்திகள் நாட்டை கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியதும், ஆபத்தானதும் ஆகும்.

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்டத்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஹிந்துத்துவா ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உணர்வுள்ள, மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்டத்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக உயர் மட்டத்தில் உள்ள ஒரு பணக்கார கூட்டத்தால் ஊழலை பிரித்து பார்க்கவும், தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ், பாஜக, சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக இருக்கும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

9.6.11

ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம்! நாமும் ஆதரிப்போமே!!

JUNE 9, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற மக்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை துவக்கியிருக் கிறார்கள்.  சினிமாமூலம் ஆபாசம்,  பத்திரிகைகள் மூலம் ஆபாசம் இப்படி வியாபாரமாக செய்யப்படும் ஆபாசத்திற்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை தொடக்கி இருப்பது வரவேற்ப்புக்கு ஊறிய ஒன்றாகும். நல்லதை நாமும் ஆதரிப்போமே!! 
 இவர்களது ஆபாசத்திற்கு எதிரான யுத்தத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

27.5.11

இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில்  நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடங்கள்-
தஞ்சை தெற்கு 30/05/2011  அதிராம்பட்டினம்  தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் காலை9;30 மணியளவில் நடைபெறும்.  தொடர்புக்கு ; 9944329328  ,  9952141802
புதுக்கோட்டை - 29-5-11, குத்தூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கரம்பக்குடி - மாலை 4.00 மணி - தொடர்புக்கு - 99528 98900
கும்பகோணம் - 28-5-2011, தாஜ் மகால், செட்டிமண்டபம் - காலை - 10.00 மணி - தொடர்புக்கு - 88257 76645
தூத்துக்குடி - 29-5-2011, மரைக்காயர் மகால், லூர்து அம்மாள் புரம் - காலை 10.00 மணி - தொடர்புக்கு -99522 89491
குளச்சல் - 29-5-2011, சுகந்தம் ஆடிடோரியம், காலை 10.00 மணி - தொடர்புக்கு - 97918 35054
மற்ற பிற இடங்கள் வெகு விரைவில்...
தேசிய அளவிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு ஈருலக பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

21.5.11

தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை!!

May 21, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் ஜெயலலிதா அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 



இதன் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்தை விரும்பியே தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாற்றத்திற்கு வித்திடும் வகையில் மே 16 அன்று முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. 

மேலும் மின்சார தட்டுப்பாட்டினை சீர் செய்வது, வீடு கட்டுவதற்கு பண உதவி, நகரும் மருத்துவமனை போன்ற நிறை வேற்றப்படவிருக்கும் பல்வேறு வாக்குறுதிகளும் வரவேற்க தக்கவையாக உள்ளன. 

சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டினை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியினை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென இந்த தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் திட்டங்களை வகுத்து அதை சீராக நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு முனைய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

7.4.11

நேர்மறை அரசியலை தேர்வு செய்வோம்! பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம் - பாப்புலர் ஃப்ரண்ட்


கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவுசெய்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்) மற்றும் மாநில அளவிலான கட்சிகளான இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், திமுக, அதிமுக, TMC, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய அனைத்து கட்சிகளுமே ஊழல், குடும்ப ஆட்சி, சமூக விரோத செயல்கள் மற்றும் அடாவடித்தனம் போன்ற விஷயங்களில் ஒத்த கொள்கையுடையவர்களாக உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இவர்கள் பல ஆண்டுகாலமாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள், அவர்களுடன் இருப்பவர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் மட்டுமே கடந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் பயன் அடைந்துள்ளனர். இக்கட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்திருந்தாலும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டு வேறு வழியில்லாமல் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ மாற்றி மாற்றி வாக்களித்து வருகின்றனர் . எனவே மாறி மாறி இந்த பாரம்பரிய கட்சிகளே ஊழல்கள் பல செய்து மாநிலத்தை சுரண்டி ஆட்சி செய்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் மட்டும் சிபிஐ(எம்) ஏகபோகமாக ஊழல் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய பாரம்பரிய கட்சிகளால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாத சூழ்நிலையிலும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வேறு வழியில்லாமல் மாறி மாறி வாக்களிக்கும் இந்த எதிர்மறை அரசியலால் நாட்டை சுரண்டி பிழைக்கும் அரசியல் சாம்ராஜ்யம் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
எனவே தான் நாட்டு மக்களை பசியில் இருந்தும் பயத்திலிருந்தும் விடுவிக்ககூடிய நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்று அரசியலை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பாடுபட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த முயற்சியில் ஒரு சில முன்னேற்றம் அடந்துள்ளது. ஒரு சில மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எழுச்சி பெற்று வருவது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி இந்த பாரம்பரிய கட்சிகளுக்கு
எதிராக கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு வாக்களித்தே ஆக வேண்டும் என நிர்பந்தத்தால் தவித்த மக்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு நல்ல மாற்றாகவும், மருந்தாகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே ஐந்து மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தல் பாரம்பரிய கட்சிகளின் ஊழல் கூட்டணிக்கு நல்ல பாடம் புகட்டுவதொடு, மக்களுக்கு நிவாரணமும் நிம்மதியையையும் கொடுக்கக் கூடிய தேர்தலாக அமையும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது என  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின்  ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
 இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார் . தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரிப், தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் யாசிர் ஹசன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் பி.கோயா, ஏ.எஸ்.இஸ்மாயில், யா முஹைதீன், முஹம்மது காலித் ரஷாதி, ஹாமித் முஹம்மது, ஒ. .எம். சலாம், முஹம்மது ரோஷன், மௌலானா கலிமுல்லா சித்தீகி ஆகியோர் உடனிருந்தனர்.

5.4.11

சென்னையில் எஸ். டி. பி. ஐ. யின் தேர்தல் பிரச்சாரம்!

சென்னை 5 ஏப்ரல்: சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை அன்று எஸ்.டி.பி.ஐன் சார்பாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எந்த கட்சிகளோடும் கூட்டணி இல்லாமல் எஸ்.டி.பி.ஐ தனியாக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

அதில் மிக முக்கியமாக கருத்தப்படும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ-ன் தென் சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது ஹூஸைன் போட்டியிடுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை (04.04.2011) அன்று மாலை சரியாக 7.00மணி அளவில் சென்னை ஏழுகிணரு பூங்கா அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும்போது, இந்த நாட்டில் அரசியலுக்கு ஏற்பட்ட அவல நிலையை பட்டியலிட்டு பேசினார்.

தொடங்கப்பட்டு வெறும் 18 மாதங்களே ஆன நிலையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவது 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறினார்.

மேலும் ராஜஸ்தானிலும், மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான வெற்றியை எஸ்.டி.பி.ஐ பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் நமக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இருக்கின்ற எல்லா திராவிடக்கட்சிகளையும், மததுவேஷ கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் என்றும் இனி எதிர்காலம் எஸ்.டி.பி.ஐற்குத் தான் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்ம் முஹம்மது நாஜிம் அவர்கள் பேசும் போது, இந்த நாள்வரை மற்றவர்களை போன்று நாமும் மாறிமாறி இரு திராவிடக்கட்சிகளை ஆதரித்து வந்தோம், ஆனால் அவர்கள் நமக்கு துரோகம் இழைத்ததை தவிற வேறு ஏதும் செய்து விடவில்லை.

14 ஆண்டு காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு இம்முறை அரசியல் களம் காணும் நமது வேட்பாளர் முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனக்கும் வேட்பாளருக்கும் இடையே இருந்த பழைய பசுமையான நினைவுகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சாதாரண ஏ.சி மெக்கானிக்காக இருந்து வரும் நமது வேட்பாளர் அதிக தியாகங்களை செய்யக்கூடியவர் என்றும் மக்களுக்காகவே, சமூக அக்கறைக்காகவே தமது முழு வாழ்க்கையையும் அற்பணித்தவர் என்று கூறினார்.

குடிகாரர்களும், ஊழல் வாதிகளையும் ஒதுக்கி விட்டு இந்த முறை மக்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மற்றுமொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எஸ்.டி.பி.ஐற்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

ஊழல் அற்ற ஆட்சி வரவேண்டும், மக்கள் ஆட்சி ஏற்படவேண்டும், லஞ்ச லாவண்யம் ஒழிய வேண்டும் என்றால் மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் நீண்ட அலோசனைக்கு பிறகு, நிறைய கருத்துக்கணிப்பிற்கு பிறகு சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து, அதன் மூலம் தொடங்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ ஆகும். இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவை ஆளக்கூடிய அளவிற்கு எஸ்.டி.பி.ஐ தனித்துவமிக்க கட்சியாக, மக்கள் சக்தியாக மாறும் என்று கூறினார்.

இறுதியாக உரையாற்றிய துறைமுக தொகுதி வேட்பாளர் மற்ற கட்சிகளில் இருக்கும் வேட்பாளர்களுக்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்துத்தான் அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியிலேயே, பிரச்சார நேரத்தின் போதே தங்களுடைய‌ தலைவர்களிடம் அடிவாங்குவது, தகாத வார்த்தைகளால் திட்டு வாங்குவதும், கீழ்த்தரமாக நடத்தபடுவதையும் காண முடிகிறது.

இப்படி இருக்க இவர்களால் சட்டமன்றத்திற்குச் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? ஆகவே மக்களுக்காக பேசக்கூடியவர்களைத்தான் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறுதியாக தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் நன்றி உரை கூற பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மக்களிடம் வசூல் செய்துதான் அரசியலிலே இறங்கி இருக்கின்றோம். எனவே தாங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவி செய்யுங்கள் என்று கூறிய போது எஸ்.டி.பி.ஐன் தொண்டர்கள் அல்லாத பல பொதுமக்கள் பொருளாதார உதவி செய்தனர். இக்கூட்டத்திற்கு ஐனூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது எத்தனையோ அரசியல் கட்சியின் வேட்பாளர்களின் கணக்குகளை பார்வை இட்டிருக்கின்றோம் எவறுமே சரியான செலவு கணக்கை காண்பித்ததில்லை நீங்கள் மட்டும் தான் உண்மையான கணக்குகளை காண்பித்திருக்கிறீர்கள் என்று கூறி தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

26.3.11

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!


மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.


இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தது.

இவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து மாட்டின் தோலும், கத்தியும், பயன்படுத்திய வாகனமும் கண்டெடுத்ததாக போலீஸ் கூறியிருந்தது.

ஆனால், தங்கள் மீது பொய் குற்றம் சுமத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிவேலைக்கு போலீஸ் துணை போவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அ.மார்க்ஸ், பீப்பிள் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ரஜனி, ஃபெடரேசன் ஃபார் பீப்பிள்ஸ் ரைட்ஸ் செயலாளர் ஜி.சுகுமாரன், வழக்கறிஞர்களான முஹம்மது அப்பாஸ், பாதுஷா(என்.சி.ஹெச்.ஆர்.ஒ) ஆகியோர் உண்மைக் கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆகியோரை சந்தித்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் சித்திரவதைச் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் உண்மைக் கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டமாக இருக்கலாம். ஏனெனில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன என என்.சி.ஹெச்.ஆர்.ஓ குற்றஞ்சாட்டியுள்ளது.

மதுரை முஸ்லிம்கள் தேர்தல் புறக்கணிப்பு


மார்ச் 26, கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்தனர்.





4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய படவேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற மாற்றவேண்டும்.

இது சம்மந்தமாக கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.

பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம். கடந்த 22.03.2011 அன்று பல்வேறு மனித உரிமை அமப்புகள் ஒன்றிணைந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அ. மார்க்ஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கினார்கள்.

இந்த குழு பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கடந்த 23.03.2011 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலும் மேற்படி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற இதுவரை உத்தரவிடாததால் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் உள்ள 90 ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றினைந்து எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக மதுரை வாழ் முஸ்லிம்களை அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.