N

Showing posts with label இஸ்லாமிய செய்தி. Show all posts
Showing posts with label இஸ்லாமிய செய்தி. Show all posts

3.8.12

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..!

புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.

ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை திறமையாகக்கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு.
(புகாரி, முஸ்லிம்).
ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்- லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விஷயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.


நன்றி: ஐடியல் விஷ
ன் 

3.3.12

சிரியா:போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம்!


சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை தொடரும் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஃப்ரீ சிரியன் ஆர்மிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க குவைத் அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கோரிய பாராளுமன்றம், பஸ்ஸார் அரசுடன் எல்லாவிதமான உறவுகளையும் குவைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
போராளிகளுக்காக நிதி திரட்டவேண்டும், குவைத்தில் வசிக்கும் சிரியாவாசிகளுக்கு அவர்களுடைய உறவினர்களை சிரியாவில் இருந்து குவைத் அழைத்து வர வசதிகளை ஏற்பாடுச் செய்தல் ஆகியன தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 2-வது தினமாக சிரியா விவாகாரம் குறித்து குவைத் பாராளுமன்றம் விவாதித்துள்ளது. சிரியா நேசனல் கவுன்சிலை நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

26.2.12

ஆப்கான்:உள்துறை அமைச்சகத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!


அமெரிக்க ராணுவத்தினர் வெறித்தனமாக புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து ஆப்கானில் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
நேற்று ஆப்கானிஸ்தானில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்குதலில் பலியானார்கள். காபூலில் உள்துறை அமைச்சகத்தில் அதிரடியாக நுழைந்த மக்கள் அமெரிக்க ராணுவத்தினரை தாக்கி கொலைச் செய்தனர். இத்துடன் போராட்டம் துவங்கிய பிறகு பலியாகும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இச்சூழலில் ஆப்கான் அமைச்சகத்தில் தங்களின் அதிகாரிகளை நேட்டோ வாபஸ் பெற்றுள்ளது.
இதற்கிடையே, குந்தூஸ் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையகத்தை நோக்கி பேரணி நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 34 பேருக்கு காயம் ஏற்பட்டது. அமைதியாக நடந்த பேரணி, போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து வன்முறையாக மாறியது.
அரசு அலுவலகங்கள், ஐ.நா அலுவலகம் ஆகியவற்றின் மீது மக்கள் கல்வீசி தாக்கினர். ஏராளமான கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தெற்கு காபூலில் லோகார் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. நங்கர்ஹாரில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள் ஆளுநரின் வீடு மீது கல் வீசி தாக்கினர். வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து தினங்கள் கழிந்த நிலையில் போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

25.2.12

குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை


ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் முக்கிய தளமான பக்ராம் விமான தளத்தில் குப்பை பெருக்கும் ஆப்கானியர்கள் குப்பை பெருக்கும் போது எரிக்கப்பட்ட குரானின் தாள்களை கண்டனர். இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க படையினர் சார்பில் விசாரணை நடத்தி குரான் எரிக்கப்பட்டது உண்மை என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அறிவித்தனர். 

ஆனால் அமெரிக்கர்களின் மன்னிப்பை ஏற்று கொள்ளாத ஆப்கான் மக்கள் இரண்டு நாட்களாக வீதிகளில் போராட்டங்களை நடத்தினர்.  அமெரிக்க படைகளுக்கு உதவியாக உள்ள மேற்குலக செக்யூரிட்டிகள் தான் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் ஆப்கான் அரசு அறிவித்துள்ளது. 

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தாலிபான் தலைவர் முல்லா முஹம்மது உமரை வாழ்த்தி கோஷங்கள் போட்டதோடு தாலிபானின் வெள்ளை கொடியையும் ஏந்தி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குரானை எரித்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர்.


24.2.12

மதுரை: மசூதி சுவரில் மலம் பூச்சு!- கொச்சை வாசகங்கள் !!


மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு மசூதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை உள்பட 5 வேளை தொழுகை நடந்து வருகிறது.
கடந்த 17.01.2012 அன்று சில சமூக விரோதிகள் மசூதியின் வெளிப்புற சுவரில் மனித மலத்தைப் பூசி, அதில் முஸ்லிம்களை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.
அடுத்தநாள் அதிகாலை தொழுகைக்காக முஸ்லிம்கள் மசூதிக்கு வந்தபோது சுவற்றில் கொச்சையாக மனித மலத்தால் எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு  யாரோ சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை மசூதி வாசலில் போட்டு உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழமாத்தூர் முஸ்லிம்களும், ஜமாத்தார்களும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டு‍‍மே கொடுத்துள்ளனர்.
ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் நேற்று காலை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தனர் .
ஏற்கனவே, மதுரை காஜிமார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பன்றி தலையை மசூதியில் வைத்ததோடு மனித கழிவை மசூதி சுவற்றில் பூசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23.2.12

குர்ஆன் பிரதிகள் எறிப்பு விவகாரம். மன்னிப்பு கோரினார் ஒபாமா .


ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

11.2.12

இறைத்தூதரை அவமதித்த சவூதி வலைப்பூ பதிவர் மலேசியாவில் கைது


கோலாலம்பூர்:ட்விட்டர் சமூக இணையதளம் வாயிலாக முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்த சவூதி அரேபியாவை சார்ந்த வலைப்பூ பதிவரை மலேசியா போலீஸ் கைது செய்தது. 23 வயதான ஹம்ஸா கஸ்காரி சவூதி அரேபியா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மலேசியாவில் வைத்து கைதானார்.
அரசியல் புகலிடம் தேடி நியூசிலாந்திற்கு செல்லவிருந்த ஹம்ஸா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ஹம்ஸா, ட்விட்டர் சமூக வலை தளத்தில் முஹம்மது நபியின் பிறந்த நாளில் அவர்களைக் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். இவரின் கருத்துக்களுக்கு எதிராக சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கஸ்காரி தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் பெற்றார். இவரின் ட்விட்டர் அக்கவுண்ட் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

6.2.12

ஜித்தா: IFF நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்க்கை!


ஜித்தா:இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஜித்தா கிளை நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்கை! நிகழ்ச்சி ஷரபிய்யாஹ் நூர் பாலிகிளினிக்கில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.


ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மருத்துவ ரீதியாக சகோதரர் அல்-அமான் பவர்பாயிண்ட் காட்சிகளின் (presentation) மூலம் தொகுத்தளித்தார்.

இதையடுத்து குர்-ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக யோகா மாஸ்டர் சிராஜ், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிற்சிகளை (ஆசனங்களை) சகோதரர்நௌஷாத் உதவியுடன் செய்து காட்டினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக வருகைபுரிந்த அனைவரின் உடல் எடை, உயரம் ஆகிய விவரங்கள் காணப்பட்டு, அவர்களின் உடல் நிலையைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக நிகழ்ச்சியினை திருமறைக் குர்-ஆன் வசனங்களை ஓதி சகோதரர் அப்துல் கபூர் துவக்கி வைத்தார். சகோதரர் கே.ஐ.எம். ஷரீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஐ.எப்.எப்.இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஆற்றி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அதன் செயலாளர் சகோதரர் முஹம்மது அப்பாஸ் விவரித்தார். சகோதரர் T. பஷீர் அஹமத் நன்றி உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

சமுதாய பிரச்சனைக்கு தீர்வு என்ன!

அதிரைஅபூஹம்னா

இன்று மனிதன் காலையில் விழித்தவுடன் அவன்நடை முறைப்பழக்கத்தை மேற்கொள் போது பல பிரச்சனைகளை சந்திக்கின்றான் ஆனால் அவனுக்கு தீர்வுகிடைக்குமா? கிடைக்காதா? என்றஏக்கம்! நாம்தினந்தோறும் காலையில் நாளிதழ்பார்க்கும சமயத்தில் மனிதனுக்கு ஏற்பட்ட பிரச்சனை இல்லாத நாளிதலே கிடையாது!

இன்று உலகத்தில் எத்தனையோ மாற்றம்; என்று பெருமையாக பேசும்உலகம்; பிரச்சனை ஒழிந்துவிட்டதா? இல்லையா? மனிதன் எத்தனையோ கருவிகள் கன்டு பிடித்து விட்டான் பிரச்சனையே இல்லாத உலகத்தை உருவாக்கவில்லை.; அதில் பெண்களுக்கு ஏற்பட்டசிறுமிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் கற்பழிப்புபலாத்கரம் ஒவ்வொருநாளும் அதிகம். உலகத்தில் எத்தனையோ பிரச்சனைகளுக்க தீர்வு வந்தது ஏன் இதறக்கு தீர்வுவரவில்லை இதற்க்கு என்ன தீர்வு இந்த கொடியபாவச் செயலுக்கு என்ன முற்றுப்புள்ளி எந்தசட்டத்தின் மூலம்இதை முறியடிக்க முடியும்கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது ஒரு முறைகற்பை இழந்தால்மறு முறை அதை பெறஇயலாது ஆனால் இன்றை உலகத்தில் எப்படி? ; ஆராய்ந்துபார்ப்போம்

10வருடங்களில் இந்தநாட்டில் இந்தபாவச் செயலை நாங்கள் இல்லாமல்ஆக்கிவிட்டோம் என்று சொல்லக்கூடிய எந்தநாடு இருக்கிறது? உலகத்தில் நாங்கள்வல்லரசு என்று சொல்லக்கூடியநாடுகளில் பிரச்சனைகள் குறைந்து விட்டதா? சிறியோர் பெரியோர் ஆண்பெண் அரசுஊழிய்ர் உயர்ந்த குடும்பத்தில் உயர் ;ந்தநாடுகளில்; குறைந்ததா? குற்றத்தைதடுக்கும்உயர்அதிகாரிகளேஅந்தகுற்றத்தைசெய்தால்மக்கள்ஏன்பாவம்செய்யமாட்டார்கள?; 

தன்வீட்டை மிகவும்  கஷ்டத்துடன் கட்டிய தொழிலாழி அவனே அந்தவீட்டை இடித்தால் எப்படி இருக்கும் இதே போல சட்டத்தை தடுக்கக் கூடிய உயர் அதிகாரிகளே தவறு செய்தால் பாமரமக்கள் நிலைமை எப்படி இருக்கும?; சிந்தியுங்கள்!

இந்தியவிபச்சாரச்சட்டங்கள்!
 377இயற்க்கைக்கு மாற்றான குற்றம் ஒருவர் தன்னிசையாக ஓர்ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஒரு மிருகத்துடன் இயற்க்கைக்கு மாறாகப்புணர்ச்சி செய்வது குற்றமாகும் இந்தக் குற்றத்துக்கு ஆயுள்தண்டனை அல்லதுபத்து ஆண்டுகள் வரையில்சிறைகாவலுடன் அபராதமும் சேர்த்துதண்டiனாக விதிக்கப்பட வேண்டும். 373 18வயது பூர்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறை கேடான புணர்ச்சிக்கு அல்லது வேறுசட்ட விரோதமான அல்லது ஒழுக்கக்கேடா னசெயலுக் கும்பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகையநிலைக்; குப்பயனாகலாம் என்று தெரிந்திருந்தும் அந்தநபரை வாங்குவதும் வாடாகைக்கு பெறுவதும் அல்லது வேற எந்தவகையிலாவது தன்வசம் கொன்டுவந்துவைத்திருப்பதும் குற்றமாகும் பத்து ஆண்டுகள்சிறைகாவலுடன்அபராதமும்சேர்த்துத்தண்டணையாகவிதக்கப்படவேண்டும்
4-376- வன்புனர்ச்சிக்கு உள்ளான பெண் அதைச் செய்தவரின் சொந்த மனைவியாகவும் ௧௨ வயதுக்கு கீழ்ப்படாதவராகவும் இருந்தாலன்றி வண்புனர்ச்சி செய்கிற எவருரொருவரும் ஆயுள்தண்டணை அல்லது ௧௦ ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒருகால அளவுக்கு சிறைதண்டணை வகைகள்அல்லது இரன்டில் ஒன்றுவிதித்துதண்டிக்கப்பட வேண்டும் மேலும் அவரை அபராதத்திற்க்கும் உள்ளாக்கவும் செய்யலாம் அவ்வாறிந்தாலோ இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராத மோஅல்லது இரண்டு மோவிதித்துத்தண்டிக்கப்படுதல் வேண்டும்.

விபச்சாரமும் அதன் நிகழ்வுகளும்  

1 . திருமண ஆன பெண்னை கடத்திச் சென்ற போலீஸ் இன்ஸ் பெக்டர்சஸ் பெண்ட் (தினத்தந்தி28.5.2010)
2. இளம் பெண்னை பலாத்காரம் செய்து ஆபாசபடம் எடுத்தநகராட்சி தலைவர் கைது தினகரன் ஆகஸ்;8
3 . 9  வயது சிறுமி கற்பழிப்பு கொல்லப்பட்ட வழக்கு வீட்டு வேலைக் காரருக்கு 3-வது மரணதண்டனை (தினத்தந்திசெப்-29)

4 .பிலபர அரசியல் வாதியின் அசிங்கலீலைகள்அம்பலமானது(குமுதம்ரிப்போhட்7.1.2020)
5 .சாமியார் பிரேமானந்த ௧௯௯௪ கைது செய்து பட்டார் ௧௩ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் மேலும் ஆசிரமத்தில் வேலை செய்தரவி என்பவரை கொலை செய்தார் இந்த வழக்கில் அவருக்கு ௨ ஆயில் தண்டனை மற்றும் 66  லட்சம் அபராதம் வதித்தது.

7. சிறுமிபலாத்காரம் போலீஸ் அதிகாரிகைது (தினகரன்அக்டோ30;.2010)
8 . பெண்கை திபாலியல் பலாத்காரம் 3  சிறை காவலர்களுக்கு ௧௦ ஆண்டு சிறை (தினகரன்அக்டோ30)
9 . பாலியல்பலாத்காரம் பெரியப்பா மகன் மீது இளம் பெண்புகார்(தினகரன்அக்டோ11)
10 . பள்ளி சென்ற சிறுமி பலாத்காரம் சமையல் காரர்கைது (தினகரன் (அக்டோ. 2 2)
11 . ஓரினச் சேர்க்கையாளரை ராணுவத்தில் சேர்க்கலாம் அமெரிக்கராணுவத்தில் ஒரிணச் சேர்க்கையாளரை சேர்த்துக் கொள்ள ராணுவன தலைமையளகம் தெரிவித்துள்ளது (தினகரன்அக்டோபர் )
12 . திருச்சி பாதிரியார் மீது பெண் பாலியல் புகார் தெரிவித்தார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தார் பிளாரன்ஸ் மேரி (தினகரன்அக்டோர்13)

கற்பழிப்புபலாத்காரம் இதுபோன்ற பெண் இனத்தை குறிவைக்கும் குறிகாரர்கள் அதிகமாகிவிட்டார்கள் இவர்களை குறிவைத்து குற்றம்சாட்டி சரியான தன்டனை கொடுத்தால் இதுபோன்ற மிருகச்செயல் நடைபெறாது கற்பழிப்பு பலாத்காரம் செயல்செய்யும் போதுமிக சொற்பநேரம் ஆனால் அதன்விளைவு மிகக்கடினம் பெணகள்என்பது மிகவும் கண்ணியமானவர்கள் இன்று பெண்ணுரிமை என்று பேசப்படக்கூடிய காலத்தில் வாழ்கிறோம் ஆனால் பெண்ணுக்கு உரிமை அளிக்கிறதா? 

உரிமை தடுக்கப்படுகிறதா? ஒரு பெண்ணின் கண்ணியம் எப்படிஎன்றால் ஒருவீட்டில்பெண் இல்லாவிட்டால் வாளி இல்லாத கிணறு போன்றது என்றபழமொழி உள்ளது. இன்று பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை அனைத்தும் நாளிதலுக்கு வருவது கிடையாது காரணம் நாளிதலிழ் வந்தால் நம்முடைய மரியாதை பரிபோகிவிடும்  என்ற எண்ணத்தில் அந்த பிரச்சனையை அப்படியே மறைத்து விடுகிறார்கள் இன்று அதிகமான பிரச்சனை ஏழை மக்களுக்கே நடைபெறுகிறது அந்த மக்களை பணத்தை கொண்டும் பதவியை கொண்டும் பயமூட்டுகிறார்கள் உயர்குடும்பத்தில் உள்ளவர் உயர்பதவியில் உள்ளவர்தவறு செய்தால் அதை அப்படியே மறைத்து விடுகிறார்கள் ஆனால்அதே போன்று அவர்களில் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? மக்களே தன் தவற்றை மனிதனுக்கு மறைக்கலாம் ஆனால் இறைவணுடத்தில் மறைக்க முடியாது. 
பத்திரிக்கையில் வந்த சில தகவல்கள்

1980 ஆம் ஆண்டில் பிரான்ஸில்55.000 கற்பழிப்புகள் நடைபெற்றது
2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 10.2000 கற்பழிப்புகள் நடைபெற்றது
இந்தியாவில் பாலியல் பலாத்காரம்௧ 1989ல்5603 இருந்தது ஆனால் 1993ல்12537 அதிகரித்து விட்டது
1970 முதல் 1997 வரை கற்பழிப்பு விதம் 70 மூவிழுக்காடு அதிகம்
குடீஐ அறிக்கையில் வெளியிட்டுள்ளது பலத்காரம் இகற்பழிப்பு 1970ல் 37990 நடைபெற்றது 1992ஆம் ஆண்டில்10.9060 நடைபெற்றது
இந்தியா நாட்டின் 1981முதல்1983 வரை சராசரி ஒரு நாளைக்கு 60 கொலை14 கற்பழிப்பு.  இன்று இதைவிட 85 விழுக்காடு அதிகம்
23.3.1981ல் டைம்(வுஐஆநு) இதலில் வெளியான கட்டுரை இவ்வாறு கூறுகிறது
ஓவ்வொரு 24 நிமிடத்திற்கு ஒருகொலை ஓவ்வொரு10 வினாடிக்கு ஒரு வீட்டில் திருட்டு ஓவ்வொரு 7நிமிடத்திற்க்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்

எய்ட்ஸ் என்ற நோய் இல்லை என்பது உறுதியாகிவிடும்
இஸ்லாத்தின்தீர்ப்பைபற்றிமாற்றுமதத்தலைவாகள்; கூறியவைகள்!
1. கொல்கத்தாபுதியசட்டப்பல்கலைக்கழகத்தின்முன்னாள்துணைவேந்தரும்பெங்களுர்இந்தியதேசியசட்டக்கல்விநிலையத்தின்முன்னால்இயக்குனர்டாக்டர்N. சு .மாதவமேனன்கூறுகிறார்மிகச்சிறந்தகுற்றவியல்சட்டமுறைஎன்பதுமிகக்குறைவாகஅமுல்படுத்தப்படுகிறதுஹத்என்ற (கற்பழிப்புக்குகொடுக்கும்தண்டனை) இந்தசட்டமேநவீனகாலங்களில்உருவானமிகச்சிறந்தசட்டம்என்றுவாதிடமுடியும்வயதுக்குவராதசிறுமிகளைக்கூடக்கூட்டமாககற்பழிக்கும்கொடுமைநடைபெறுகிறதுஇந்தநாட்டின்நம்பெண்மக்களைபாதுகாக்கஇஸ்லாமியதண்டனைச்சட்டமேசரியானதுஎன்றஅவர்கூறினார்

2. எட்மண்ட்பர்க்என்பர்கூறுகிறார்முகம்மதியச்சட்டம்உலகில்இதுவரைதோன்றியசட்டங்களிலேயேமிகவும்அதிகஒளியூட்டும்சட்டத்துறைகோட்பாடுஆகும்

3.நீதியரசர்வீரமந்த்ரிசர்வதேசநீதிமன்றத்துணைத்தலைவர்(ஸ்ரீலங்கஉச்சநீதிமன்றமுன்னால்நீதிபதி) இஸ்லாமியச்சட்டவியல்அமைப்புமுறைஉலகிலேயேமிகவும்சிறப்புறவளர்ச்சியடைந்துள்ளதுமிகவும்தகுதிவாய்ந்தஅமைப்புமுறைகளிலேஒன்றுஇஸ்லாமியசட்டம்இறைவனின்விருப்பத்திற்ககுநிபந்தனையில்லாமல்அமைந்துள்ளதுவாழ்வின்அனைத்துஅம்சங்கள்இஸ்லாமியசட்டத்தில்அனைத்திலும்உள்ளடங்கியுள்ளதுஇஸ்லாமியபுனிதச்சட்டம்சமயக்கடமைகளின்அனைத்தையும்உள்ளடங்கியுள்ளஅமைப்புமுறையாகும்
4.டாக்டர்அம்பேத்கார் (இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தின்சிற்பி) பிறப்பிலேஉயர்வுதாழ்வுகற்பிக்கும்பேதமையைஉதறித்தள்ளிச்சமூகக்கூட்டுறவின்அடிப்படையல்மக்கள்வாழ்வதற்கானபோற்றதக்கவழியைஉருவாக்கியவீரஞ்செறிந்தமுஹம்மதுவைப்புகழ்ப்போதியசொற்கள்கிடைக்கவில்லை

விபச்சாரத்தினால்ஏற்படும்விளைவுகளும்இஸ்லாத்தின்தீர்வுகளும்
(இறைவனின்உண்மையானஅடியார்கள்) விபச்சாரம்செய்யமாட்டார்கள்(;அல்குர்ஆன்-25:68)
விபச்சாரத்தின்அருகில்கூடநெருங்காதீர்கள். திண்ணமாக! அதுமானங்கெட்டசெயலாகவும்மிகத்தீயவழியாகவும்இருக்கிறது (;அல்குர்ஆன்-17:32)

இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். மாஇஸ்இப்னுமாலிக்அவர்கள்நபி(ஸல்) அவர்களிடம்வந்(துதாம்விபச்சாரம்புரிந்துவிட்டதாகவாக்குமூலம்அளித்)தபோது, அவரிடம்நபி(ஸல்) அவர்கள்,.(அவளை) நீர்முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோகையாலோ) சைகைசெய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!.என்றார்கள். அவர்,.(அவ்வாறெல்லாம்) இல்லைஇறைத்தூதர்அவர்களே!.என்றுகூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக்கேட்காமல்.அவளுடன்நீர்உடலுறவுகொண்டீரா?. என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர்,.ஆம். என்றுகூறினார். அப்போதுதான்அவருக்குக்கல்லெறிதண்டனைவழங்கும்படிநபி(ஸல்) அவர்கள்உத்தரவிட்டார்கள்.
அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். மணமுடிக்காதநிலையில்விபசாரம்புரிந்துவிட்டவருக்குஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நூறுசாட்டையடி) தண்டனைகொடுத்துஅவரைஓராண்டுக்காலம்நாடுகடத்துமாறுதீர்ப்பளித்தார்கள்

ஆமிர்அஷ்ஷஅபீ (ரஹ்;) அவர்கள்அறிவித்தார்கள்.(விபச்சாரம்புரிந்துவிட்டஒருபெண்ணுக்குமக்கள்கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்றுகல்லெறிதண்டனையைநிறைவேற்றியபோதுஅலீ(ரலி) அவர்கள்,.இறைத்தூதர்(ஸல்) அவர்களின்வழிமுறைப்படியேநான்இவளுக்குக்கல்லெறிதண்டனைவழங்கினேன். என்றார்கள்

ஆனால்இன்றுநம்நாட்டில்கற்பழித்துவிட்டால்அவருக்குகொடுக்கும்தண்டனையால்கற்பழிப்பைதடுக்கமுடிந்ததா?நம்நாட்டின்சட்டம்படிஅவருக்குஆயுள்தண்டணைஅல்லது10ஆண்டுசிறைதண்டனையும்அபராதமும்கொடுக்கப்படும்இதனால்சிறையில்கூட்டம்அதிகறிக்கலாம்ஆனால்கற்பழிப்பைஒருகாலமும்தடுக்கமுடியாது.

10வருடங்களுக்குமுன்புஅன்றுபிரேம்மனாதாசாமிவழக்கின்மூலம்கற்பழிப்பைதடுக்கமுடிந்ததா?இன்றுதற்பொழுதுஒருசாமியாரும்ஒருகண்ணியஸ்திரி; இதுபோன்றுபெண்களின்நிலமைகேள்விகுறியாகஇருக்கிறதுஆனால்நாங்கள்பெண்களைமதிக்கிறோம்பெண்களுக்குஉரிமைகொடுக்கிறோம்என்றுகூறுகிறார்கள்இதுதான்உரிமையா? பெண்களுக்குஉரிமைஅளித்தஒரேமார்;க்கம்இஸ்லாம்.; பெண்ணின்உரிமைபாதுகாக்கஇஸ்லாமியசட்டத்தைஅமுல்செய்துபாருங்கள்நாட்டின்நிலமைநன்றாகசெழிப்பாகஇருக்கும். இன்றுநம்நாட்டில்மும்பைகல்கத்தாபோன்றபெருங்நகரங்களில்அரசுஅனுமதியோடுநடைபெறுகிறதுநாட்டின்முன்னேற்றம்மக்களின்முன்னேற்றம்நாட்டின்சட்டத்தில்தான் உள்ளது எனவே உலக அரங்கில் உலகத்தில்விபச்சாரத்தைஅடியோடுஒழித்திடசரியானதீர்வுஇஸ்லாமியசட்டத்தில்தான்இருக்கிறதுஇதைநியாயமானமுறையில்செயல்படுத்திபாருங்கள். 

நபி(ஸ்ல்)அவர்கள் சுமார் 23 வருடங்கள் ஆட்சி செய்தார்கள் அந்தமக்கள் அனைத்து பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தார்கள் எதனால் முறையான சட்டத்தை செய்தார்கள் ஆகையால் நபி(ஸல்) அவர்கள் மரணித்து சுமார்௧௪௦௦ வருடங்கள் அதிகமாகி விட்டது அன்றைக்கு என்னசட்டமோ இன்றைக்கும் இதேசட்டம்தான் இனிமேல்உலகம்அழியும் வரைக்கு இதேசட்டம்தான் இந்த இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துங்கள் இஸ்லாமிய சட்டங்களை குறை பார்க்காமல்அந்ததண்டனைஅதிகம் உள்ளது என்று நினைக்கிறார்கள் ஆனால் இதை நடை முறைபடுத்திய நாடுகளில் விபச்சாரத்தின் சதவீதம்எந்த அளவு நியமாக சிந்தியுங்கள்! நாமும் நமது மக்களும் உலகத்தில் வாழக்கூடிய அனைத்து நாடுகளில் விபச்சாரத்தை அடியோடு ஒழித்திட அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

ஆக்கம்
அதிரைஅபூஹம்னா
                              

28.1.12

பாங்கொலியை எரிச்சலாக நோக்கிய பிரபல ஹொலிவூட் நடிகர் இஸ்லாத்தை தழுவுகிறார்.


ஹொலிவூட் உலகின் பிரபல நடிகரான லியாம் நீசன் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

கத்தோலிக்கரான இவர் ஹொலிவூட் படப்பிடிப்பு ஒன்றுக்காக துருக்கியில் தங்கியிருந்தபோதே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் திர்மானத்திற்கு வந்துள்ளார். 59 வயதான லியாம் நீசன், அதான் (பாங்கு) ஒலியை கேட்டதாகவும் அது தன்னில் ஊடறுத்து, இஸ்லாத்தை தழுவும் தீர்மானத்தை தான் மேற்கொள்ள உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழுகைக்கான (பங்கு)  அழைப்பை கேட்ட போது, தனக்கு எரிச்சலாக இருந்ததாகவும் ஆனால் எஞ்சியிருந்த கிழமைகளில் தன்னை கவர்ந்த, மிகவும் அழகான ஒலியாக அது மாறி விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


16.1.12

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்- வரலாறு




உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்http://www.facebook.com/photo.php?fbid=187649431330344

உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “

படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”

முசோலினி: ” யார் அவர்களை வழி நடத்துவது ?”

தளபதி: ” ஒமர் முக்தார் “

முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”

தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.

பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).

சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

9.1.12

லவ் ஜிஹாத் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷா


பத்தணம்திட்டா(கேரளா):’எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே நன்றி. சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.
லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் ஹிந்து ஜாக்ருதி டாட் காம் செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரள போலீசார்
கண்டுபிடித்தனர்.
இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஷாஹின்ஷா தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“பத்தணம்திட்டாவில் ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரியில் நான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் இதர சமூகங்களை சார்ந்த மாணவிகளை திருமணம் புரிந்ததால் என்னையும், எனது நண்பர் சிராஜுத்தீன் என்பவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர். 2009 ஆகஸ்ட் மாதம் இச்சம்பவம் நடந்தது.
தொடர்ந்து நடந்த லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகமும், பொய் பிரச்சாரங்களும் எங்கள் இருவரையும் தளரச் செய்தது. நீதிமன்ற தலையீட்டினால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நான் வெளிநாட்டில் வேலை தேடி வந்தேன். இச்சம்பவத்தின் துவக்கத்தின் போதே நான் எல்லா உண்மைகளையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். அன்று அனைத்து ஊடகங்களும் அவற்றையெல்லாம் வளைத்து திரித்து செய்தி வெளியிட்டன. உண்மை தெளிவான பிறகும் அவற்றை குறித்து விவாதிக்க ஊடகங்கள் தயாராகவில்லை என்பதுதான் கவலையான விஷயமாகும்.
மனோராமா, கேரள கவ்முதி, ஜன்ம பூமி ஆகிய பத்திரிகைகளும், இந்தியா விஷன், கைரளி ஆகிய தொலைக்காட்சி சேனல்களும் எங்களை மோசமாக சித்தரித்தன. எல்லா இடங்களிலும் இரண்டு பெண்கள் என்ற குற்றச்சாட்டே எழுந்தது. ஆனால் இந்தியா விஷன் அதனை நான்கு பெண்கள் என செய்தி வெளியிட்டது. அத்துடன் நான் எம்.பி.ஏ பயின்ற ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரி நிர்வாகம் என் மீதான வைராக்கியத்தை இச்சம்பவம் மூலம் பழிவாங்க தீர்மானித்தனர்.
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான உரிமைகளை கோரி நடந்த போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். கல்லூரி மீது தவறு இருப்பதாக உயர்நீதிமன்றமும், பல்கலைக்கழகமும் கண்டுபிடித்தன. கல்லூரியின் மோசடிகளை வெளியே கொண்டுவந்ததற்காக கல்லூரி நிர்வாகம் என்னை பழிவாங்க லவ் ஜிஹாதை ஆயுதமாக்கியது. லவ் ஜிஹாத் குறித்து புலனாய்வு செய்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் கன்டோன்மண்ட் துணை கமிஷனர் கோபகுமார் எனது வீட்டிற்கு வந்து என்னை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடுவேன் என மிரட்டினார். ஆனால் இவர் என்னை ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. நான் கூறாத காரியங்களை எல்லாம் இவர் தனது கேஸ் டயரியில் எழுதினார். இதற்கு எதிராக புகார் அளித்தபோதிலும் முந்தைய இடதுசாரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும், எனது குடும்பத்தினரும் பல இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. எனது படிப்பு முடங்கியது. எனது நண்பர் சிராஜுத்தீனுக்கு கேரள போக்குவரத்துக் கழகத்தில் வேலை பறிபோனது. இவ்வழக்கை தொடர்ந்து மனம் உடைந்த அவரது தந்தை இறந்துபோனார். பல தினங்களை நீதிமன்றங்களில் செலவழித்தோம்.
“நீங்கள் தீவிரவாதிகள் என்பதால்தானே தாடி வளர்த்துள்ளீர்கள்” என பல வழக்கறிஞர்களும் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.
ஒரு சமூகத்தை அவமதிப்பதற்காக என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரை பலிகடாவாக மாற்றினார்கள் என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. இனி மேலாவது பொது சமூகமும், ஊடகங்களும் இத்தகைய பிரச்சாரங்களில் உண்மையை அடையாளம் காண முயலவேண்டும்.
இவ்வாறு ஷாஹின்ஷா கூறினார்.

6.1.12

சவூதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள்!!!


உலகில் சவூதிஅரேபியாவில் மட்டுமே திரையரங்குகள் இல்லை என்பதை அதன் சிறப்பாகவோ, குறையாகவோ சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்தச் சிறப்பு அல்லது குறை நீங்கும் என்பதை அறிவிக்கும் செய்தி இது.

ரியாதிலுள்ள மன்னர் சவூத் பல்கலைகழக விழாவொன்றில் உரையாற்றிய சவூதி பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் டாக்டர் அப்துல் அஸீஸ் கோஜா "சினிமா தியேட்டர்களைத் திறப்பது குறித்து அரசாங்க முடிவு எட்டப்பட்டால் தமது அமைச்சரவை அதற்கான ஒத்துழைப்பை அளிக்கும் என்று அறிவித்துள்ளார். ஊடகப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் இச்செய்தியை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் பேசும் போது, ரியாத் நகர மேயர் இளவரசர் டாக்டர் அப்துல் அஸீஸ் பின் அயாஃப் கூறியதை மேற்கோள் காட்டினார். "திரையரங்குகளைத் திறப்பதற்கான முயற்சியில் இருக்கிறோம் என்று மேயர் கூறியுள்ள நிலையில், அதற்கான உறுதியான அடிப்படைத் திட்டத் தகவல்கள் கிடைக்காமல் அவ்வாறு மேயர் பேசியிருக்க மாட்டார் என்பதால், திரையரங்குகளை நாட்டில் திறப்பதில் பண்பாடு மற்றும் தகவல்தொடர்பு அமைச்சகம் உதவ ஆயத்தமாகவே இருக்கிறது " என்றார் டாக்டர் கோஜா.

முன்னதாக, ரியாத் நகர மேயர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 2010 ஆம் ஆண்டின் கோடையில்,சவூதியிலிருந்து சுமார் 230,000 பேர்  'திரைப்படம் " என்ற காரணத்துக்காகவே அருகிலுள்ள ஐ.அ.அமீரகம் சென்று வந்தனர் . ஆகவே, சவூதி அரேபியாவில் திரைப்படத்தின் தேவையை இது உணர்த்துகிறது என்பதாகக் கொள்ளலாம்" என்று கூறியிருந்தார். மேயரின் இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு அதிகார மையங்களிலிருந்து ஆதரவும் கிடைத்துள்ளது.

அதேநேரம், சினிமா திரையிடலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் மேலாண்மையை தமது அமைச்சகம் மேற்கொள்ளும் என்றார் அமைச்சர். சவூதி அரேபியாவில் 'பொது' திரையரங்குகள் இல்லையெனினும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள்/ துணைத் தூதரக வளாகங்களில் திரைப்பட விழாக்கள் அவ்வப்போது நடைபெறுவதுண்டு


முகத்திரை அணிய தடை-இஸ்லாத்தை தழுவிய போலிஸ்


பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

inneram

30.12.11

முத்துபேட்டை ஜும்மா பள்ளியின் வரலாறு


முதன் முதலாக முத்துப்பேட்டை நகருக்கு சுமார் 400 வருடத்திற்கு முன்பு எந்த பெயரும் இல்லாமல் வெறும் பள்ளி வாசல் என்ற பெயரில் அடியெடுத்து வைத்தேன். நான் அடியெடுத்து வைத்த பகுதியான மரைக்காயர் தெருவில் பெருவாரியான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன் முதலில் என்னுடைய இடத்தில் குத்பா தொழுகையை நடத்தினார்கள். (இந்த ஊரில் முதல் குத்பா நடந்தது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் எனக்கு குத்பா பள்ளிவாசல் என்று எனக்கு பெயரிடப்பட்டது. பெயரில்லாமல் வந்த எனக்கு பெயரிட்டு கண்ணியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். 

இதனைத்தொடர்ந்து காளங்கள் நகர்ந்தன. என்னிடம் வந்து இறைவனை வணங்கிய எண்ணிலடங்கா மக்களை நான் அவ்வப்போது இழந்திருக்கிறேன்,இதனை எண்ணி நான் ரொம்பவும் வருந்துவதுண்டு. முன்னோர்கள் சென்றாலும் வரக்கூடிய காலங்களில் உள்ள மக்களை எண்ணி, என்னிடம் அதிக தொடர்பை ஏற்படுத்தக் கூடிய மக்களை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

ஆனால் மிக குறைவான மக்களே என்னிடம் வருகிறார்கள். ஏன் நான் ஒரு பழைய பள்ளிவாசல் என்ற பெயரிலா அல்லது என்னுடைய வருகை இவ்வூர் மக்களுக்கு பிடிக்க வில்லையா என்பது தெரியவில்லை.ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ், மற்றும் பெருநாள் தொழுகை ஆகிய தொழுகைக்கு மட்டும் என்னை கையில்பிடிக்க முடியாது. 


ஏனெனில் அன்று மட்டும் இவ்வளவு மக்கள் கூட்டம் என்னிடம் வந்து இறைவனை வணங்குவதை பார்த்தால் ஆனந்த கண்ணீர் வரும். ஆனால் சாதாரண 5 வேலை தொழுகையில் மிகவும் நான் கைசேதம் அடைந்தது போல் என் முகம் காட்சி தரும். இதனைக்கண்டு நான் அஞ்சுவதில்லை என்னிடம் வந்து இறைவனை வணங்க மிகப்பெரிய கூட்டம் வருங்காலங்களில் அதிகமாக என்னுடைய இடத்திற்கு வருகை தந்து என்னை சிறப்பிப்பார்கள் என்ற என்னத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கிறேன்.



.................................................................


குறிப்பு:


இந்த குத்பா பள்ளி திறப்பு விழாவினை முன்னிட்டு அனைத்து கட்சி நண்பர்களும், இஸ்லாமிய அனைத்து இயக்கத்தினரும் மற்றும் ஊர் பொது மக்களும் அவரவர் கட் அவுட் வைத்து வண்ணம் முத்துப்பேட்டை நகரை குதூகலமக்கிவருகிறது.

source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா,சுபைத் கான், மர்சூக் அஹமது,AKL . அப்துல் ரஹ்மான்
.................................................................