N

26.2.12

ஆப்கான்:உள்துறை அமைச்சகத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!


அமெரிக்க ராணுவத்தினர் வெறித்தனமாக புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து ஆப்கானில் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
நேற்று ஆப்கானிஸ்தானில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் தாக்குதலில் பலியானார்கள். காபூலில் உள்துறை அமைச்சகத்தில் அதிரடியாக நுழைந்த மக்கள் அமெரிக்க ராணுவத்தினரை தாக்கி கொலைச் செய்தனர். இத்துடன் போராட்டம் துவங்கிய பிறகு பலியாகும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
இச்சூழலில் ஆப்கான் அமைச்சகத்தில் தங்களின் அதிகாரிகளை நேட்டோ வாபஸ் பெற்றுள்ளது.
இதற்கிடையே, குந்தூஸ் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையகத்தை நோக்கி பேரணி நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 34 பேருக்கு காயம் ஏற்பட்டது. அமைதியாக நடந்த பேரணி, போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து வன்முறையாக மாறியது.
அரசு அலுவலகங்கள், ஐ.நா அலுவலகம் ஆகியவற்றின் மீது மக்கள் கல்வீசி தாக்கினர். ஏராளமான கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தெற்கு காபூலில் லோகார் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. நங்கர்ஹாரில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள் ஆளுநரின் வீடு மீது கல் வீசி தாக்கினர். வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து தினங்கள் கழிந்த நிலையில் போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.