N

16.5.11

முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி - மமக புறக்கணிப்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான  மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது.  
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதலவராக செல்வி ஜெயலலிதா இன்று ஏற்றார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் 33 பேரும் ஏற்றுக்கொண்டனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த இந்த விழாவில்  கவர்னர் பர்னாலா முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட பலருக்கும் ஜெயலலிதா அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த அழைப்பினை ஏற்று நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, அஜீத்சிங் ஆகியோரும், அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர்  விஜயகாந்த், இந்திய  கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன்,  தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நரேந்திரமோடி கலந்து கொண்டதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான  மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி inneram web site

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.