
மதுரை மாவட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீரபெருமாள், மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஆட்சி மாற்றம் தேவை என பொது இடங்களில் பேசுகிறார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் துரை வீட்டில், சோதனை என்ற பெயரில் போலீசார் அத்துமீறி நடத்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.