உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மொஹாலியில் அவர் கூறுகையில்,
உலகக் கோப்பை தொடரில் எங்கள் அணி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே ஆடி வருகிறது. இந்திய அணி மீதுதான் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு நெருக்கடி அதிகம். ஆனால் எங்கள் அணிக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை.
ஆட்டத்தில் எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் விளையாட வேண்டுமென்றே அணி வீரர்களிடம் கூறியுள்ளேன். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் பாகிஸ்தான் வலுவாகவே உள்ளது. அக்தர் 100 சதவீதம் நலமாக இருக்கிறார்.
பல்வேறு பிரச்னைகளால் பாகிஸ்தான் அணியின் நற்பெயர் சிறிது குறைந்துள்ளது. உலகக் கோப்பையை வெல்வதன் மூலம் எங்கள் அணியை சர்வதேச அளவில் தலை நிமிரச் செய்ய முடியும் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.