N

26.3.11

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்!! இரு நாட்டு பிரதமர்கள் வருகை!!


மார்ச் 26, மொகாலி: உலக கோப்பை கிரிக்கெட் தற்போது கடும் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்றால் ஆர்வத்திற்கு சொல்லவே வேண்டாம். இரு தரப்பு ஆட்டம் யுத்தம் போல் இருக்கும். ரசிகர்கள் வரும் 30ம் தேதிக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகிறது. இதற்கான டிக்கெட் வாங்கிட கடும் போட்டி நிலவுகிகிறது. பலர் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இரு நாட்டு தரப்பிலும் இருந்து ரசிகர்கள் வரவுள்ளதால் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் டிக்கெட் ஏழாயிரம் வரை பிளாக்கில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டியை காண இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானிக்கும் ஆட்டத்தை காண வருமாறு பிரதமர் தரப்பில் இருந்து வரவேற்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருவரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட் விமானம் நிறுத்த இடம் கிடைக்காமல் தவிப்பு.

இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் இப்போதே ஹவுஸ்புல்லாகி விட்டன. இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், இங்கு குவிய தயாராகி வருகின்றனர். இவர்கள் செல்லும் தங்களுடைய ஜெட் விமானத்தை நிறுத்திக்கொள்ள இடம் ஒதுக்குமாறு அரசு அதிகாரிகளிடம்மும், விமானதுறையினருடமும் கேட்டு வருகின்றனர்.

பல விமானங்களை சண்டிகாரிலோ அல்லது அருகிலோ நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் புதன்கிழமை மதியம் முதல் இரவு வரை மொகாலி ஆர்வ மின்னொளியில் ஜொலிக்க தயாராகிறது.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.