N

29.3.11

திமுக என்றும் மக்களின் வில்லன்!!

மார்ச் 29, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஜி.எச்.சேகரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி பஜாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். 

போன தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும், இந்த தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்றும் தி.மு.க.வினர் கூறுகின்றனர். அதை ஒத்துக்கொள்கிறேன்.

அப்படி என்றால் என்றும் மக்களின் வில்லன் தி.மு.க.வினராகிய நீங்கள்தான். தி.மு.க. மட்டும் பொதுமக்களுக்கு நல்லது செய்திருந்தால் இத்தனை கட்சிகள் இங்கு தோன்றியிருக்காது.

கோடிகளை வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் கோடிகளுக்காக கூட்டணி வைக்கவில்லை. மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகதான் கூட்டணி வைத்தேன்.

மின்வெட்டு இல்லா தமிழகம் வேண்டும், விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றுதான் கூட்டணி வைத்தேன். அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும்’’ என்று பேசினார்.

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இவற்றை கருத்தில் கொண்டு ஓட்டு போடுங்கள்’’ என்று பேசினார்.

"தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுதான் இருக்கும். ’தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்னும் கடுமையாக சோதனைகள் நடத்த வேண்டும்.

அப்போது தான் தி.மு.கவினரிடம் இருக்கும் கறுப்பு பணம் பிடிபடும். காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு ஜால்ரா அடிக்கிறது. தற்போது கருணாநிதி நடிகர்களை மிரட்டி பிரசாரத்திற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.