N

30.3.11

வேட்பாளரை அடித்த விஜயகாந்த்

தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.