2011ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விபரத்தை டெல்லியில் உள்துறை செயலாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் ஆகியோர் வெளியிட்டனர். இதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 120.60 கோடியாக அதிகரித்துள்ளது.
இது கடந்த 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகையைவிட 18 கோடி அதிகம். எனினும் கடந்த முறை 21 விழுக்காடாக இருந்த மக்கள் தொகை வளர்ச்சி தற்போது 17 விழுக்காடாக குறைந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 58.6 கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் 74 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ் 2011) பிப்ரவரி 9ல் துவங்கி பிப்ரவரி 28ல் முடிந்தது.
முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது. தற்போது நடத்தப்பட்டது 15 வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்கு பின் 7வது கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.