N

2.4.11

விஜயகாந்த் பற்றிய கேள்வி! பதில் சொல்ல ஜெ. மறுப்பு!


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 01.04.2011 அன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது ஜெயலலிதாவிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: கருத்துக்கணிப்புகளில் எல்லாம் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறப்படுகிறதே?
பதில்:  கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கேள்வி:  அ.தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில வெற்றி பெறும்?

பதில்: எனது சொந்த கணிப்பின்படி அ.தி.மு.க கூட்டணி 218 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். எனவே தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.

கேள்வி:  விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரை அடித்துள்ளாரே? அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. கொடியை கீழே இறக்கும்படி கூறியிருக்கிறாரே?
பதில்:  மன்னிக்கவும். தேர்தல் பிரசாரத்துக்கு நேரமாகிவிட்டது. நான் செல்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.