
மும்பையில் (02.04.2011) நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
28 ஆண்டுகளுக்கு பின் உலககோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்கின்றனர்.உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை கிடைத்தது.
இந்தியா- இலங்கையுடனான உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடந்து வந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது.
இதையடுத்து 275 ரன் இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 275 ரன் இலக்கை 10 பந்துகள் உள்ள நிலையில் எட்டியது இந்தியா.
சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.