N

3.4.11

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு குடிசைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு

 இராமநாதபுரம் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை மெழுவர்த்தி சின்னத்தில்  போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் குடிசைப்பகுதிகளில் வாக்குசேகரித்தனர். அப்போது அம்மக்கள் பேராதரவு வழங்கினர்.
இராமநாதபுரம் மமக வேட்பாளர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கிராமங்களில் வாழும் குடிசைப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார், அவருக்கு அக்கிராம மக்கள் உற்சாக வரேற்பு அளித்தனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------
அதேபோல் சேப்பாக்கம்-திருவேல்லிகேணி மமக வேட்பாளர் எம்.தமீமுன் அன்சாரி சென்னை சிந்தாதிரிபேட்டை குடிசைப்பகுதிகளில் வாக்குசேரித்தார் அங்குள்ள மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஓட்டுக்களை இரட்டை மெழுவர்த்தி சின்னத்திற்கு பதிவு செய்வோம் என கூறினர்.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மமக வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா அவர்களும் ஆம்பூர் தொகுதி உட்பட்ட கிராமஙகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் உடன் உள்ளனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.