N

25.4.11

ஸ்பெக்ட்ரம்: கனிமொழி எம்.பி. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ., 2வது குற்றப்பத்திரிகையை பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. முதல் குற்றப்பத்திரிகை ஏப்ரல் 1ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2வது குற்றப்பத்திரிகையில்  எம்.பி., கனிமொழியின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் ஒரு அங்கமான சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி., க்கு ரூ. 214 கோடி பணபரிவர்த்தனை நடந்தது குறித்து சி.பி.ஐ., கனிமொழியிடம் விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி,சரத்குமார், ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2ஜி ஊழலில் கனிமொழிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டி.வி.,யின் மற்‌றாரு பங்குதாரருமான தயாளுவின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்‌லை.

இந்த குற்றப்பத்திரிகையிலும் ராஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ராஜா லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
ஷாகித் பால்வாவின் சகோதரர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. தனிநபர்கள் 5 பேர் மற்றும் சினியுக், குசேகான் ஆகிய 2 கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 கனிமொழி எம்.பி. ,   கலைஞர் டி.வி., நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் நிறுவனத்தின் ஆசிப் பாவ்லா, சினியுக் நிறுவனத்தின் கரிம் மொரானி, குசேகான் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால், சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜா ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
 வரும் மே மாதம் 6ம் தேதி கனிமொழி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் கரிம் மொரானி ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.