N

7.4.11

ஆ. ராசாவின் நண்பர் தீபக் மரணம்


முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் உறவினரான தீபக்(30) ஆழ்வார்பேட்டையில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, ஆ. ராசா, அவரது நண்பர் சாதிக் பாட்சா உள்ளிட்டோரின் வீடுகளை கடந்த டிசம்பரில் சோதனையிடும்போது தீபக்கின் வீட்டையும் சோதனையிட்டிருந்தது.

தீபக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு நேற்று சென்றிருந்தார். உடற்பயிற்சி செய்யும்போது நெஞ்சுவலிப்பதாக பயிற்சியாளரிடம் கூறியுள்ளார்.

ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட தீபக், பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
போலீசார் இதுதொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை.தீபக்கின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் எதுவும் தராததால் நாங்கள் வழக்கு
அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் கருதினால் நாங்கள் விசாரணை நடத்துவோம். அது இயற்கையான மரணமாக இருந்தால் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது என மயிலாப்பூர் உதவி ஆணையர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நன்றி நக்கீரன்


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.