N

7.4.11

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்: ஸ்டாலின்

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,   ’’திமுக தலைமையில் நடப்பது குடும்ப ஆட்சிதான். முதல்வர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதித்தான் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 



இவை தவிர, திருமண உதவித் திட்டம், சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டைகள் திட்டம், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்தத் திட்டங்கள் எல்லாம் கடந்த 2006-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தேர்தலில் சொன்னதுபோல் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, மக்கள் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களை தந்த திமுக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.