அதிரை மக்கள் நீண்டகாலமாக சில கனவுகளை மனதிற்குள்ளே வைத்து வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த கனவுகள் நிறை வேற உங்கள் வாக்குகளை தான் பேரமாக வைக்க வேண்டும்.
ரூ.100 க்கும் 200 க்கும் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள். அரசியல் கட்சிகள் உங்கள் ஓட்டுகளை வைத்து அவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் குளிர் காய்கிறார்கள். ஒட்டு போட்ட நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். நீங்கள் போய் கேட்டால்.அதான் பணம் தந்தோமே என்பார்கள். விலை மதிப்பில்லாத உங்கள் ஓட்டுக்களை அற்ப காசுக்காக விலைபோக போகிறீர்களா?. ஒட்டு உங்கள் உரிமை அதை நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும் கருவியாக மாற்ற இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள்:
- தெருக்கோடியில் இருந்த ஊர்களெல்லாம் நகராட்சியை இருக்கும் போது நகராட்சிக்குரிய அணைத்து தகுதிகள் இருக்கும் அதிரை மூன்றாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
- அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உறைதல் வேண்டும்.
- அதிரையில் ஆபத்து நேரத்தில் உதவ உருபடியாக ஒரு மருத்துவமனையும் இல்லை.அதிரையின் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை முழுநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்தல் வேண்டும்.
- அதிரையில் பெருகிவரும் வாகன விபத்துகளால் பதிக்க படுவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நமதூருக்கு தனி 108 ஆம்புலன்ஸ் செயல் படுத்துதல் வேண்டும்.
- அதிரையில் தீவிபத்து ஏற்பட்டால் அணைக்க உதவும் தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைதல் வேண்டும்.
- அதிரை-கும்பகோணம் மார்க்கத்தில் இது வரை பேருந்து வசதி கிடையாது. இதனால் அதிரை மற்றும் மதுக்கூர் மக்களின் போக்குவரத்து தூரம் தேவையில்லாமல் அதிகமாகிறது. இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
- அதிரை நகரில் பேருந்து நிலைய இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கஷ்டபடுகிறார்கள். அவர்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க பட வேண்டும்.
- கடந்த இரண்டு வருடமாக நமதூரில் செயல்பட்ட வருவாய் அலுவலர் தற்போது இல்லை.இதனால் பொது மக்கள் வருமான சான்றிதழ் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பட்டுகோட்டை செல்ல வேண்டிய நிலையுள்ளது. உடனே நமதூருக்கு வருவாய் அலுவலர் தேவை.
இந்த கோரிக்கைகளை உங்கள் வீடு தேடி வரும் வேட்பாளரிடம் இதை செய்தல் உங்களுக்கு ஒட்டு போடுவோம் என கூறி நமதூரின் தலையெழுத்தை உங்கள் ஓட்டினால் மாற்றுங்கள்.
சிந்திக்கும் திறன் கொண்ட மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.....
நன்றி முஸ்லிம் மலர்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.