N

6.6.11

வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது

கொல்லம்: வீட்டில் தனியாக இருந்த நான்கரை வயது சிறுமியைக் கொலை செய்ததற்காக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாலையம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் ஸ்ரீஜா. நான்கரை வயதான ஸ்ரீஜா வீரபாண்டியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.

சசிகுமாரும், மாலதியும் ஆனவிலாசத்தில் பணிபுரிந்து வந்தனர். பள்ளி விடுமுறை நாள் என்பதால் மகள் ஸ்ரீஜாவை ஆனவிலாசத்திற்கு அழைத்து வந்திருந்தனர். கடந்த 1-ம் தேதி இருவரும் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டில் மகளை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல இடங்களில் மகளை தேடினர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மரத்துக்கு இடையே ஸ்ரீஜா உடல் இருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குமுளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமுளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களிடமும் விசாரித்தனர். விசாரணையில் சசிகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுவன் தான் சிறுமியை கொன்றான் என்பது தெரிய வந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.