N

25.8.11

தங்கம் விலை சவரனுக்கு ரூ392 குறைந்தது


சென்னை: கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது சர்வதேச அளவில் அதிகரித்ததால் கடந்த சில தினங்களாக மேலும் தங்கம் விலை அதிகரித்தப்படி இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. திருமண சீசன் என்பதாலும், அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதாலும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.25 ஆயிரம் வரை எட்டும் என்று தகவல்கள் வெளியானது. இதனால் நடுதர வர்க்கத்தினர்  மிரண்டு போய் இருந்தனர். நேற்று காலை கூட தங்கம் விலை சற்று அதிகரித்திருந்தது. ஆனால் திடீரென நேற்று மாலை தங்கம் விலை குறைந்தது. இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
நேற்று காலை ரூ.21 ஆயிரத்து 288 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் மாலை ரூ.21 ஆயிரத்து 40-க்கு குறைந்தது. பவுனுக்கு ரூ.248 குறைந்திருந்தது. இன்று (புதன்) காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2630-ல் இருந்து ரூ.2581 ஆக குறைந்தது. கிராமுக்கு ரூ.49 குறைந்தது. இதனால் பவுனுக்கு ரூ.392 வீழ்ச்சி அடைந்தது.
இன்று காலை ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.20 ஆயிரத்து 648 ஆக விற்பனை ஆனது. ரூ.21 ஆயிரத்தை தாண்டி மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த தங்கம் விலை சற்றே குறைந்திருப்பது மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.