காட்டாங்குளத்தூர்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பாக தங்க மோதிரம் பரிசளிக்கப்போவதாக தேமுதிக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தேமுதிக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த்க்கு நாளை பிறந்த தினமாகும் இதையொட்டி, அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை அருகே காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக சார்பில், விஜயகாந்த் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாளை பிறக்கும் குழந்தைகள் அனைத்துக்கும் இலவச மோதிரம் வழங்கப்படுகிறது. காஞ்சி மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன் எம்எல்ஏ, குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவிக்கிறார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.