N

25.8.11

ஜெயலலிதா வழங்கும் இப்தார் விருந்து............


சென்னை: முதல்வர் ஜெயலலிதா சார்பில் வருகிற 26ம் தேதி இப்தார் விருந்து நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.புனித ரமலான் மாத நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பி்ல இப்தார் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவும் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.அவர் அளிக்கும் இப்தார் விருந்து சென்னை கிண்டி லீ ராயல் மெரீடியன் ஹோட்டலில் 26ம் தேதி மாலை நடைபெறுகிறது. 6 மணிக்கு தொடங்கும் இந்த விருந்து நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.