டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி, செங்கோட்டை பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். இதையொட்டி செங்கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் கொடியேற்றிவிட்டு செல்லும் வரை பழைய டெல்லி, மத்திய டெல்லி ஆகியவற்றில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானப்படைத் தளங்களில் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கால்வாய்கள் சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர செங்கோட்டையை இணைக்கும் சாலைகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அன்டை மாநிலங்களில் இருந்து டெல்லி்க்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது.
தலைநகரில் 10 ஆயிரம் போலீசார், ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.